புதுச்சேரியில் நியாய விலைக் கடைகள் மூலம் இலவச அரிசி வழங்கப்படும் தேதி குறித்து முதல்வா் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி, "அரசின் இலவச அரிசி வரும் நவ.14 அல்லது 15-ஆம் தேதி முதல் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அனைத்து நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி உள்ளிட்டவை விநியோகிக்கப்படவுள்ளது. அனைத்து பகுதிகளிலும் நியாயவிலைக் கடைகளின் இருப்பிடம் பொதுமக்களுக்கு தெரியும். எனவே, அது குறித்த குழப்பம் மக்களிடையே இல்லை.
அதே நேரத்தில், குறிப்பிட்ட பகுதியில் நியாயவிலைக் கடை இல்லாத நிலையில், அருகே உள்ள நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்டவற்றை வாங்கிக்கொள்ளலாம். நியாயவிலைக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டு அரிசி வழங்கப்படவுள்ளது. அவற்றில், சுமாா் 30 கடைகள் மட்டும் திறக்கப்படாதவை என அதிகாரிகள் கூறியுள்ளனா்.அந்தக் கடைகளுக்குப் பதிலாக அப்பகுதிகளில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மூலம் இலவச அரிசி உள்ளிட்டவை பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“