அஸ்ஸாம் மாநிலம் பர்பெட்டா பகுதியைச் சேர்ந்தவர்கள் சலிம் உத்-தின், ஷமீலா தம்பந்தியினர். அவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆண் குழந்தை ஒன்றை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது 7 வயதாகும் அந்த சிறுவனுக்குத் தான் இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
ஷாகனுர் அலம் என்ற அந்த சிறுவனின் கைகள், கால்கள் எல்லாம் எலும்பு தெரியும் அளவிற்கு உடல்நிலையில் மாற்றம் தெரிகிறது. ஆனால். அந்த சிறுவனின் வயிறு, இரண்டு கால்பந்துகளை ஒன்றாக சேர்த்து வைத்தது போல, பெரியதாக வீங்கியுள்ளது. இதனால், நடப்பது கூட சிரமாகிவிட்டது அந்த சிறுவனுக்கு. பல்வேறு சோதனைகளுக்கு பின்னர், பித்த நீர் சுரக்கும் நாளங்களில் ஏற்பட்ட பிரச்சனையில் சிறுவனுக்கு இந்த நோய் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
தொடர்ந்து மோசமடைந்து வரும் அந்த சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதற்காக ரூ.2 லட்சம் செலவாகும் என கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் அந்த சிறுவனை காப்பாற்றுவது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், தனது மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பண உதவி கேட்டு வருகின்றனர் அந்த சிறுவனின் பெற்றோர்.
இது தொடர்பாக சிறுவனின் பெற்றோர் கூறும்போது: ஷாகனுர் அலமினால் நடக்கக் கூட முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டது. தற்போது, எங்கள் மகனின் வயிறு இவ்வளவு பெரியதாக வீங்கியிருக்கிறது. பல்வேறு மருத்துவமனையில் சென்று சிகிச்சை எடுத்த பின்னரும் ஷாகனுர் அலமினால் இயல்பு நிலைக்கு திரும்பமுடியவில்லை. அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பதற்காக மாதந்தோறும் நாங்கள் ரூ.1500 முதல் ரூ.2,000 வரை செலவு செய்து கொண்டிருக்கிறோம்.
அறுவை சிகிச்சை மேற்கொள்ள தேவையான பணத்தை எங்களால் ஒருபோதும் சாம்பாதிக்க முடியாது. எனவே, ஏழ்மையான குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அரசு எங்கள் குழந்தையை காப்பாற்ற முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.