ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மீராகுமார் தேர்வு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். இந்நிலையல், குடியரசுத் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது குறித்து எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை நடத்தினர்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உள்பட 17 அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

×Close
×Close