இந்நிலையில், பழைய வீடியோ ஒன்றை எடுத்து மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் மீரா குமார் மக்களை சபாநாயகராக இருந்தபோது தன்னை பேசவிடாமல் தடுத்ததாக குற்றம்சாட்டியிருக்கிறார்.
சுஷ்மா ஸ்வராஜ் அப்போது மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்கிறார் சுஷ்மா. மேலும், ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது ஊழல் நிறைந்தது என குற்றம்சாட்டினார். இது தொடர்பாக 6 நிமிடம் அவர் பேசுகையில் 60 முறை மீரா குமார் குறுக்கிட்டார் என சுஷ்மா ஸ்வராஜ் கடந்த 2013-ம் ஆண்டு ட்விட்டரில் பகிர்துள்ளார். தற்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுஷ்மா அந்த பழைய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் முதன்மை படுத்தியுள்ளார்.
Speaker interrupted Sushma 60 times in 6-min speech http://t.co/am8tiCJ4Iu via @https://twitter.com/TheDailyPioneer https://t.co/hxHWHaJ4D9
— Sushma Swaraj (@SushmaSwaraj) 6 May 2013