Advertisment

ஜனாதிபதி தேர்தல்: மீரா குமார் இன்று வேட்புமனு தாக்கல்!

author-image
Ganesh Raj
புதுப்பிக்கப்பட்டது
New Update
meira kumar

Hon'ble speaker of Parliament Mrs Meira Kumar shares thought with Sanjay Aggarwal president MCC in an interactive talk on 'Women empowerment and rising violence in society-contradictory signals in Indian democracy", organized by the MCC chamber of Commerce and industry, in Kolkata on Saturday. Express photo. 23.11.13

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறங்கியுள்ள மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.

Advertisment

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேட்புமனு செய்தார். பல்வேறு கட்சிகளின் ஆதரவை பெற்றுள்ள ராம்நாத் கோவிந்த கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டார். பாஜக சார்பில் முன்னதாக நிறுத்தப்பட்ட ராம்நாத் கோவிந்த தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்ற நிலையில், எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரும் தலித் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாராக அறிவிக்கப்பட்ட மீராகுமார் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட 17 கட்சிகளின் முன்னிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.

இதைத் தொடர்ந்து தனக்கு ஆதரவு கேட்டு மீராகுமார் 30–ம் தேதி சுற்றுப்பயணம் தொடங்க திட்டமிட்டுள்ளார். அவர் குஜராத் மாநிலத்தில் உள்ள மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Meira Kumar
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment