ஐனாதிபதி தேர்தல்: காந்தியவாத கொள்கையின்படியே இந்த யுத்தம் : மீரா குமார்

காந்தியின் கொள்ளையின்படியே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மீராகுமார் தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில், எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமார், இன்று அகமதாபாத்தில் உள்ள சபர்பதி ஆசிரமத்தில் இருந்து, ஆதரவு கோரி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். மீராகுமார் சமர்பதி ஆசரமத்தில் சுமார் 40 நிமிடங்கள் இருந்தார். அவருடன் குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர்கள் பாரத்சின் சோலாங்கி, ஷன்கெர்சின் வஹேலா ஆகியோர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் மீராகுமார் கூறும்போது: காந்தியவாத கொள்கையின் அடிப்படையிலேயே தற்போது நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் களம் இறங்கியுள்ளேன். காந்தியவாத கொள்கைகளின் மூலம் மேம்படுத்திக்கொண்டு, அந்த கொள்கைகளை பரப்புவதற்காகவே நான் சபர்பதி ஆசிரமத்திற்கு வந்திருக்கிறேன்.

இந்த பிராந்தியத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். இந்தியாவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாட்டிலும் இதுபோல நடக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார் என்று கூறினார்.

1917-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை காந்தியடிகள் வாழ்ந்த வீடு தான், தற்போது சபர்பதி ஆசிரமமாக அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close