குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்தை வேட்பாளராக பாஜக அதிகாரப்பூர்வமாக அறித்துள்ளது. இன்று காலை 11 மணியளவில் அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். இந்த வேட்புமனு தாக்கல் செய்யும் போது பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோரும் டெல்லி சென்றுள்ளனர். பல்வேறு கட்சிகளின் ஆதரவுகளை பெற்றுள்ள பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் கிட்டத்தட்ட 60 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெறும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.எனினும், எதிர்க்கட்சிகனின் பொதுவேட்பாளராக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் வரும் ஜூலை 28-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கூறப்படுகறது.
பாஜக முதலில் தலித் வேட்பாளரவை நிறுத்தியதையடுத்து, எதிர்க்கட்சிகளும் தலித் வேட்பாளரை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்குப்பதிவு ஜூலை 17-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 20-ம் தேதியும் நடைபெறவுள்ளது.