தனது காலில் விழுந்த எம்பியை எச்சரித்த பிரதமர் மோடி... வைரலாகும் புகைப்படம்

பாஜக நிகழ்ச்சி ஒன்றுக்கு செல்லும் வழியில் பிரதமர் மோடி காலில் திடீரென விழுந்த எம்பியை ஒருவரை அவர் கடுமையாக எச்சரித்தார். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

டெல்லி பாராளுமன்றத்தில் இன்று காலை நடைபெற்ற பாஜக நிகழ்ச்சி ஒன்றுக்கு பிரதமர் மோடி செல்லும் வழியில், எம்பி ஒருவர் காலில் விழுந்ததை அவர் கடுமையாக எதிர்த்தார்.

டெல்லி மக்களவையில் குளிர்காலக் கூட்டத்தொடர் தொங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக, பாராளுமன்றம் வளாகத்தில் உள்ள அரங்கம் ஒன்றில் மோடிக்குப் பாராட்டு விழா நடந்தது. ‘நம்பிக்கையில்லா தீர்மானம்’ விவகாரத்தில் மோடி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு இன்று இந்தப் பாராட்டு விழா நடந்தது.

Prime Minister Narendra Modi - பிரதமர் நரேந்திர மோடி

காலில் விழுந்த நபரை தடுத்த மோடி

இந்தப் பாராட்டு விழாவிற்காகப் பாராளுமன்றம் வந்த பிரதமர் நரேந்திர மோடியின் காலில் திடீரென கட்சி எம்பி ஒருவர் விழுந்தார். இதனைச் சற்றும் விரும்பாத மோடி, உடனே அந்த நபரை எச்சரித்து தனது காலில் விழ வேண்டாம் என்றார். இந்தப் புகைப்படம் பிரத்தியேகமாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதனைப் பலரும் பார்த்து வருகிறார்கள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close