/tamil-ie/media/media_files/uploads/2018/02/Priya-Prakash-Warrier.jpg)
‘எல்லோருக்கும் உத்வேகமாக இருந்தவர் காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
ஒரே பாட்டில் ஓவர் பாப்புலர் ஆனவர் பிரியா பிரகாஷ் வாரியர். இவருடைய முதல் படமான ‘ஒரு அடார் லவ்’ படத்தில் இடம்பெற்ற பிரியா பிரகாஷ் வாரியர் கண்ணடிக்கும் பாடலைத் தடைசெய்யக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கூட கடிதம் எழுதப்பட்டது. அத்துடன், சில இடங்களில் இவர்மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு பாட்டு பாடி அஞ்சலி செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். கரண் ஜோஹர் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கபி அல்விட நா ஹெக்னா’. இந்தப் படத்தில், ‘கபி அல்விட நா ஹெக்னா’ என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. சோனு நிஹம், அல்கா யாக்னிக் இருவரும் இணைந்து இந்தப் பாடலைப் பாடியுள்ளனர். ஷங்கர் – ஈசன் – லாய் மூவரும் இசையமைத்த இந்தப் பாடலில் ஷாருக் கானும், ராணி முகர்ஜியும் தோன்றுவர். இந்தப் பாடலைப் பாடித்தான் தன் அஞ்சலியை செலுத்தியுள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.
அத்துடன், ஜெயேந்திரர் மறைவிற்கும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர். ‘காஞ்சி பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மறைவிற்கு வருந்துகிறேன். அவர் எப்போதுமே மற்றவர்களுக்கு உத்வேகமாக இருந்தவர்’ என்று பதிவிட்டுள்ள அவர், ஜெயேந்திரரின் படத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளார்.
Paying respects to Kanchi peethadhipathi Shri Jayendra Saraswati. He will always be an inspiration for others. #JayendraSaraswathipic.twitter.com/EUc1kPbC54
— Priya Prakash Varrier (@priyapvarrier) 28 February 2018
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.