3 மாதங்களில் 2-வது முறையாக கொரோனா பாதிப்பு: வீட்டுத் தனிமையில் பிரியங்கா காந்தி 
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கும் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் தன்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளதாக ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
Advertisment
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட சில நாட்களில் அவரது மகள் பிரியங்கா காந்திக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் அப்பொது அவரை தனிமைப்படுத்துகொண்டார். மூன்று மாதங்களில் இரண்டாவது முறையாக அவருக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் “ மீண்டும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா வழிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்துகொண்டுள்ளேன்’ என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
Tested positive for covid (again!) today. Will be isolating at home and following all protocols.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,047 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 54 பேர் மரணமடைந்துள்ளனர். அண்மையில் தமிழக முதல்வர் ஸ்டாலினும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.