தமிழகத்தில் தி.மு.க முதல அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் விரோத இந்த சட்ட மசோதாவிற்கு புதுவை கவர்னர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் தெரிவித்தார்.
புதுவை மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் தி.மு.க முதல அமைச்சரால் கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் விரோத இந்த சட்ட மசோதாவிற்கு புதுவை கவர்னர் தமிழிசை ஆதரவு தெரிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த மசோதாவிற்கு புதுவை கவர்னர ஆதரவு என்பது பல்வேறு சந்தேகங்களுக்கு இடம் அளிப்பதாக உள்ளது.
ஒருபுறம் நாட்டு பிரதமரின் அத்தனை செயல்களையும் கண்மூடித்தனமாக எதிர்த்து அரசியல் நடத்தும் தஸ்டாலினுக்கு கவர்னர் துணை நிற்க வேண்டிய காரணம் என்ன ? இது சம்பந்தமாக பாஜக நிலைப்பாடு என்ன.? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
புதுவையில் தொழிலாளர்கள் 12 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்ற மசோதாவை கொண்டு வர முன்னோட்டமான கருதுகிறாரா என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது இது போன்ற தொழிலாளர் விரோத சட்ட மசோதா புதுவையில் கொண்டு வரப்பட்டால் தொழிலாளருடைய நன்மைக்காக பொதுச் செயலாளர் எடப்பாடி யார் அனுமதி பெற்று கடைசி ஒரு துளி ரத்தம் உள்ளவரை புதுவை அ.தி.மு.க கடுமையாக எதிர்க்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர் நாகமணி ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"