Advertisment

அரசு மருத்துவ கல்லூரிக்கு ரூ.2 கோடி வருமான இழப்பு: புதுவை அ.தி.மு.க சி.பி.ஐ-யிடம் புகார்

அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூபாய் 2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்வதாக சி.பி.ஐ இயக்குனருக்கு புதுச்சேரி அ.தி.மு.க சார்பில் புகார் கடிதம் அனுப்பி உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Puducherry AIADMK MLA Vaiyapuri Manikandan on Indira Gandhi Medical College Tamil News

சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவ கல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர்.

புதுச்சேரி அ.தி.மு.க மாநில துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் சி.பி.ஐ இயக்குனருக்கு அனுப்பியுள்ள புகார் கடிதத்தில் கூறியுள்ளது பின்வருமாறு:-

Advertisment

புதுவை கதிர்காமம் அரசு இந்திராகாந்தி மருத்துவ கல்லூரிக்கு தேவையான மருந்துகள், உபகரணங்கள் கொள்முதல் செய்வது வரை மிகப்பெரும் முறைகேடுகள் நடந்து வருகிறது. மருத்துவ கல்லூரியில் தற்காலிக பணி நியமனம் செய்வதிலும் எந்த நியமன விதிகளும் கடைபிடிக்கப்படு வதில்லை. நீட் தேர்வு அடிப்படையில் தகுதியான மாணவர்களை சேர்க்காமல் புறக்கணி க்கின்றனர்.

சுயலாப நோக்கோடும், ஆதாயம் பெற்று மருத்து வக்கல்லூரி அதிகாரிகள் மருத்துவ கல்வியில் என்.ஆர்.ஐ. மருத்துவ இடங்களை விற்று வருகின்றனர். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு மருத்துவ இடங்களை தாரை வார்க்கின்றனர். தற்போது பிரெஞ்சு வாழ் மக்கள் உள் ஒதுக்கீடு என புதிதாக விஞ்ஞான ரீதியிலான ஊழலில் இறங்கியுள்ளனர்.

என்.ஆர்.ஐ.-யிடம் பெற வேண்டிய சுமார் ரூ. 1 கோடிக்கும் மேலான கட்டணத்தை பெறாமல் தன்னிச்சையாக கட்டணத்தை சுமார் ரூ.4 லட்சமாக குறைக்கின்றனர். இதனால் அரசு மருத்துவ கல்லூரிக்கு ஆண்டுதோறும் ரூ.2 கோடி வருமான இழப்பை ஏற்படுத்தி திட்டமிட்டு மோசடி செய்கின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Aiadmk Puducherry Cbi Puduchery
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment