“நீதிமன்ற அவமதிப்பு, ஓ.பி.எஸ் இதை செய்யக் கூடாது”; கண்டிக்கும் புதுச்சேரி அ.தி.மு.க

அ.தி.மு.க கொடி சின்னங்களை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் பயன்படுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க கொடி சின்னங்களை பயன்படுத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் ஓபிஎஸ் தரப்பினர் மீண்டும் பயன்படுத்துவது என்பது கண்டிக்கத்தக்கது என அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

author-image
Jayakrishnan R
New Update
Puducherry AIADMK secretary A Anbalagan on Mekedatu dam Tamil News

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன்.

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

Advertisment

அ.தி.மு.க நிர்வாகி சுத்துக்கேணி பாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநில செயலாளர் அன்பழகன் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்பழகன், “அ.தி.மு.க கொடி மற்றும் சின்னங்களை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றமே கூறிய நிலையில் மீண்டும் அதை ஓபிஎஸ் தரப்பினர் பயன்படுத்துவது என்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயல்.
அ.தி.மு.க குறித்தும், கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் குறித்தும் விமர்சிக்க ஓபிஎஸ்-க்கு தகுதியும் ,அருகதையும் இல்லை என்றார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: