பாபு ராஜேந்திரன் - புதுச்சேரி
முதலமைச்சர் என். ரங்கசாமி புதுச்சேரியில் சட்டப்பேரவை இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.12,700 கோடிக்கான பட்ஜெட்டை காலை 9.07 மணிக்கு தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-
புதுச்சேரி நகரப் பகுதியில் இந்திரா காந்தி சிலையிலிருந்து ராஜீவ் காந்தி சிலை வரை மேம்பாலம் அமைப்பதற்கு 500 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மீண்டும் நியாய விலை கடை திறந்து மானிய விலையில் பருப்பு சர்க்கரை இலவச அரிசி வழங்கப்படும்.
மீன்பிடி தடைக்காலத்தின் போது வழங்கப்பட்ட 6 ஆயிரத்தை உயர்த்தி ரூ. 8,000 ஆக வழங்கப்படும்.
மழைக்கால நிவாரணமாக வழங்கப்பட்ட 3 ஆயிரத்தை உயர்த்தி இனிவரும் காலத்தில் ரூ. 6000 ஆக வழங்கப்படும்
பத்தாம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தலா 20 ஆயிரம், 15 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் விதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பொதுத்தேர்வில் பாட வரிசையில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு தல ஐந்தாயிரம் விதம் ஊக்க பரிசு வழங்கப்படும்.
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து உள்விளையாட்டு அரங்கம் ஆக்கி உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
மடுகரையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியை ரூபாய் 15 கோடியில் முதன்மை கலைக்கல்லூரி ஆக மாற்றப்படும்
புதுச்சேரியில் மாடித்தோட்டம் அமைக்க ஐந்தாயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் என். ரங்கசாமி அறிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“