scorecardresearch

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி… மனித உரிமைகள் அமைப்பு நூதன போராட்டம்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தாரை தப்பட்டையுடன் சங்கு ஊதி மணி அடித்து சவ பாடை ஊர்வலம் நடத்தி புதுச்சேரி மனித உரிமைகள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

puducherry news, puducherry, rangasamy,
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி; மனித உரிமை அமைப்பு நூதன போராட்டம்

புதுச்சேரியில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி தாரை தப்பட்டையுடன் சங்கு ஊதி மணி அடித்து சவ பாடை ஊர்வலம் நடத்தி புதுச்சேரி மனித உரிமைகள் அமைப்பினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் காமராஜர் சிலை முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மாயமாக்குவதை கண்டித்தும், உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தியும் புதுச்சேரி மனித உரிமைகள் அமைப்பு சார்பில் சவபாடை ஊர்வலம் நடத்தி காமராஜரிடம் ஒப்பாரி வைத்து முறையிடும் போராட்டம் நடத்தியது.

இதற்காக அண்ணா சிலை முன்பு ஒன்று கூடிய போராட்டக்காரர்கள் சவ பாடை கட்டி அதில் ஒருவரை சடலம் போல் படுக்க வைத்து மாலை மரியாதையுடன் சங்கு ஊதி, மணி அடித்து, தாரை தப்பட்டை உடன் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

அண்ணா சாலை வழியே புறப்பட்ட ஊர்வலம் காமராஜர் சிலை முன்பு வந்தடைந்தது, அங்கு போராட்டத்தில் வந்திருந்த பெண்கள் காமராஜர் சிலை முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து புதுச்சேரியில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தை திரும்ப பெற வேண்டும் என ஒப்பாரி வைத்து அழுது முறையிட்டனர்.

இது குறித்து போராட்டக்காரர்கள் சார்பில் முருகானந்தம் செய்தியாளர்களிடம் கூறும்போது: “காமராஜர் சீடரான முதலமைச்சர் ரங்கசாமியின் மக்கள் விரோத போக்குகள் குறித்து அவரது குருவான காமராஜரிடம் முறையிட்டு கோரிக்கையுடன் ஒப்பாரி வைத்து அழுது முறையிட்டதாக தெரிவித்தார். இதனை அடுத்து, போராட்டக்காரர்கள் 50-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Puducherry human rights organization protest to withdraw eb bill high

Best of Express