/tamil-ie/media/media_files/uploads/2017/09/kiran-bedi-7591.jpg)
Tamil Nadu news today
இந்திய பாதுகாப்பு துறைக்கு அமைச்சராக புதிதாக பொறுப்பேற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வாழ்த்து தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை விரிவாக்கம் செய்யப்பட்டது. தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயம், முக்தர் அப்பாஸ் நக்வி, நிர்மலா சீதாராமன் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில், நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். மறைந்த பிரதமர் இந்திராகாந்திக்கு பிறகு பாதுகாப்பு துறைக்கு பெண் ஒருவர் அமைச்சராக பதவியேற்பது இதுவே இரண்டாவது முறையாகும். இதனால், நிர்மலா சீதாராமனுக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில், “அவருக்காக நான் பெருமையாக உணர்கிறேன். தனது வேலையில் அவர் மிகவும் புத்திசாலி.
Sitharaman was Minister of State for Commerce prior to the rejig. In a Twitter post, Bedi praised her and said, “Proud of her. She is brilliant in her work. அவர் தனது வழியில் மெல்ல மெல்ல முன்னேறியவர். அவருக்கு எனது வாழ்த்துகள்”, என பதிவிட்டார்.
Proud of her.
She is brilliant in her work.
She has earned her way thru every bit. @nsitharaman
Wish her the best pic.twitter.com/0AihfkR9b1— Kiran Bedi (@thekiranbedi) 3 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.