புதுச்சேரி சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்
புதுச்சேரி சமத்துவ மக்கள் கட்சியில் இருந்து நிர்வாகிகள் கூண்டோடு விலகி மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர்.
புதுச்சேரியில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமாரின் செயல்பாடு சரி இல்லை என கூறி கட்சியிலிருந்து விலகினர்.
அதனைத் தொடர்ந்து புதுச்சேரி அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில், சென்னையில் உள்ள அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு நேரில் சென்று, எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ் வேந்தன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"