Advertisment

டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த புதுச்சேரி சபாநாயகர்; வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை

புதுச்சேரிக்கு தேவையான மத்திய அரசின் உதவிகள் குறித்து அமித் ஷா உடன் ஆலோசனை செய்தார் சபாநாயகர் செல்வம்

author-image
WebDesk
New Update
Puducherry Speaker and Amit shah

புதுச்சேரிக்கு தேவையான மத்திய அரசின் உதவிகள் குறித்து அமித் ஷா உடன் ஆலோசனை செய்தார் சபாநாயகர் செல்வம்

புதுடெல்லி சென்றுள்ள புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் இன்று (08.07.2023) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.

Advertisment

இந்த சந்திப்பின் போது புதுச்சேரி மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், புதுச்சேரிக்கு தேவையான மத்திய அரசின் உதவிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

இதையும் படியுங்கள்: மத்திய அரசின் நிதி சிக்கலால் குறையும் புதுச்சேரி வளர்ச்சி; நிர்மலா சீதாராமனிடம் ரங்கசாமி மனு

மேலும் புதுச்சேரி பி, சி, எஸ் அதிகாரிகளுக்கு காலத்தோடு பதவி உயர்வு வழங்குவது சம்பந்தமான பணி விதிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கி அதனை மத்திய பணியாளர் சீர்திருத்தத்துறைக்கு அனுப்பி உள்ளதற்கு நன்றி தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பின் போது சட்டமன்ற உறுப்பினர் கொள்ளப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக், பா.ஜ.க மாநில செயலாளர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Amit Shah Puducherry
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment