ஆளுநர் கிரண்பேடியை தொகுதிக்குள் விடாதீங்க; எம்.எல்.ஏ.க்களுக்கு முதல்வர் உத்தரவு!

புதுச்சேரி அரசுக்கும் – துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான மோதல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது. இந்த நிலையில் ‘நான் நல்ல நிர்வாகியாக செயல்படவேண்டுமா? அல்லது ரப்பர் ஸ்டாம்பாக செயல்படவேண்டுமா? என்று கிரண்பேடி ட்விட்டரில் பதிவிட்டார்.

இதையடுத்து, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இன்று சட்டப்பேரவையில், “அரசு அதிகாரிகள், அமைச்சர்களின் அனுமதியின்றி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்திக்கக் கூடாது. கிரண்பேடி, எம்.எல்.ஏக்களின் அனுமதியின்றி தொகுதிக்குள் நுழைய முற்பட்டால், எம்.எல்.ஏக்கள் மறியல் செய்ய வேண்டும். அதிகாரத்திற்கு உட்பட்டு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி செயல்படாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும்” என எச்சரித்துள்ளார்.

×Close
×Close