Advertisment

சீக்கியர்களுக்கு அதிக வாய்ப்பு; பஞ்சாபில் ஆழமாக காலூன்ற முயற்சிக்கும் பாஜக

சீக்கியர்களுக்கு தேர்தலில் அதிக வாய்ப்பு; பஞ்சாப் அரசியலில் ஆழமாக காலூன்ற முயற்சிக்கும் பாஜக; அதன் வாய்ப்புகள் என்ன?

author-image
WebDesk
New Update
சீக்கியர்களுக்கு அதிக வாய்ப்பு; பஞ்சாபில் ஆழமாக காலூன்ற முயற்சிக்கும் பாஜக

Manraj Grewal Sharma

Advertisment

In Punjab, BJP attempts a makeover as it hopes to get a foot in the door: பஞ்சாப் தேர்தலில் பாரதிய ஜனதாவின் வாய்ப்புகள் குறித்து அக்கட்சிக்குள் பல கருத்துகள் உள்ளன. "எங்கள் கூட்டணி தேர்தல்களில் வெற்றிபெறும்" என்ற உற்சாகத்தில் இருந்து, "நாங்கள் வெற்றி பெறுவோம்" என்ற அதே தலைவர்களால் "இரட்டை இலக்கத்திற்குச் சென்று எதிர்கட்சியை உருவாக்கினால் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்" என்றும் 'இரட்டை இலக்கங்களை கூட தொடமாட்டோம்" என்றும் பல்வேறு கருத்துக்கள் உள்ள நிலையில், ஒரு பிரிவினர் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்கள் மற்றும் டெல்லி தலைவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தில் மகிழ்ச்சியடையவில்லை.

காங்கிரஸ் (கேப்டன் அமரீந்தரின் பஞ்சாப் லோக் காங்கிரஸ்) மற்றும் ஷிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி-சன்யுக்த்) ஆகிய கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்களின் கூட்டணியில் முதல்முறையாக மூத்த கட்சியாக போட்டியிடும் பாஜகவின் பிரச்சாரம், தேசிய தலைமை மற்றும் பிரபலங்களால் இயக்கப்படுகிறது. அதன் போஸ்டர்களில் ஒரு 'நவான் (புதிய)' பஞ்சாப்பை உருவாக்குவது போல் தன்னை மறுவடிவமைப்பது பற்றி அதிகம் உள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள் தங்கள் உரையை "சத் ஸ்ரீ அகாலி ஜெய் ஸ்ரீ ராம்" என்று தொடங்குகிறார்கள், தேசிய தலைவர்கள் "ஜெய் பாரத், ஜெய் பஞ்சாப்" என்று முடிக்கிறார்கள், மேலும் தொண்டர்கள் "புல்லா" (அதாவது பூ, ஆனால் தாமரை என்று அர்த்தம்) என்ற தாள முழக்கங்களுக்கு மத்தியில் தோள் அடித்து நடனமாடுகிறார்கள்.

தேர்தலுக்கு இன்னும் ஒருவாரம் உள்ள நிலையில், அக்கட்சியினர் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, மாநிலத்தில் அதிக ஆதரவாளர்களைக் கொண்ட ராதா சோமி சத்சங் பியாஸின் தலைவரான பாபா குரிந்தர் சிங் தில்லானைச் சந்தித்தார், அதே நேரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அகல் தக்த் ஜதேதாரை அழைத்து மதமாற்றங்கள் குறித்து பகிரப்பட்ட கவலையைப் பற்றி விவாதிக்கிறார். ஃபரித்கோட்டில் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு கிடைக்கப்பெற்ற பரோல் மிகவும் பொருத்தமான நேரத்தில் வருகிறது. தேரா தலைவர், தெற்கு மால்வாவில் தனது ஆதரவாளர்களுடன், அகாலி தளம் மற்றும் காங்கிரஸுக்கு எதிராக களமிறங்கினார்.

பாரம்பரியமாக நகர்ப்புற இந்துக்களின் கட்சியான, பாஜக இப்போது சீக்கிய முகங்களின் ஆதிக்கத்துடன் தேர்தலுக்குப் போகிறது. தேசிய பொதுச் செயலாளர் தருண் சுக், சீக்கியர்களுக்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் வழங்கப்படும் என்று முன்னதாக அறிவித்திருந்தார். மற்றும் முன்னாள் முதல்வர் பியான்ட் சிங் படுகொலை உட்பட ‘அரசியல்’ கைதிகளின் விடுதலை போன்ற பெரும் கவலைகள் முன்னனியில் உள்ளன. கட்சியின் தேர்தல் பிரச்சாரம் அது மதத்திற்கு செய்த செயல்பாடுகளிலும் கவனம் செலுத்துகிறது.

1997ல், அகாலிதளத்துடன் முதன்முதலில் கூட்டணி வைத்தபோது, ​​34 இடங்களைக் கோரியிருந்தாலும், பாஜக போட்டியிட்ட 22 இடங்களில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த எண்ணிக்கை 2007ல் 19 ஆக மாறி 2017ல் 3 ஆக குறைந்தது. இப்போது கட்சி 60-65 இடங்களில் போட்டியிடுகிறது, 2002ல் நான்காவது எல்லை நிர்ணய ஆணையத்திற்குப் பிறகு இந்துக்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. பி.எல்.சி.யின் 8 பேர் உட்பட பி.ஜே.பி சின்னத்தில் போட்டியிடும் 73 வேட்பாளர்களில், பி.ஜே.பி ஒரு தேர்தலில் வெற்றி பெற்றதை இடங்களை விட அதிகமாக 23 இடங்களில் வெற்றிபெறும் என்று நம்புகிறது அல்லது மற்றொன்று கடந்த ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்ற இடங்களில் வெற்றி பெறும் என்று நம்புகிறது.

விவசாயிகள் போராட்டத்தின் போது பஞ்சாப் அரசியலில் பரபரப்பாக மாறி, எஞ்சிய கோபத்தை தொடர்ந்து அனுபவித்து வரும் பாஜக கட்சி, மாற்றுக் கட்சியிலிருந்து வந்த 15 பேரை களமிறக்கியுள்ளது, இது கட்சியில் நீண்டகாலமாக இருப்பவர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான லக்ஷ்மி காந்தா சாவ்லா கூறுகையில், பஞ்சாப் கட்சிகளில் "கட்சி மாறியவர்கள்" இவ்வளவு பேரை தான் பார்த்ததில்லை. "அவர்கள் கட்சியில் இணைந்த நிமிடமே, அவர்களை 'வரிஷ்ட் நேதா' (மூத்த தலைவர்கள்) என்று அழைப்பது விசித்திரமானது." என்றார்.

அகாலிகளால் சட்டவிரோத மணல் கொள்ளை நடந்ததாக குற்றம் சாட்டிய மற்றொரு மூத்த தலைவர், இப்போது கட்சியில் இருக்கும் "வெளியாட்களுக்கு" வழங்கப்பட்ட முன்னுரிமையைப் பற்றி கோபமாகிறார். “எஸ்ஏடி தலைவர் சுக்பீர் பாதலின் உதவியாளராக இருந்த பர்மிந்தர் பிரார்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் திதார் சிங் பாட்டிக்கும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ராணா குர்மித் சிங் சோதிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

வேளான் சட்டங்களுக்கு எதிரான கோபத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்ளும் முயற்சியில், கட்சி தனது முக்கிய ஆதரவாளர்களான ஹர்ஜீத் கிரேவால் போன்றவர்களை புறக்கணித்தது, அதற்கு பதிலாக வெளியில் இருந்து தலைப்பாகை அணிந்த முகங்களை விரும்புகிறது. பெரிய பிரபலமானவர்களும் தேசியத் தலைமையின் கவனத்தில் உள்ளனர்.

இருப்பினும், பஞ்சாபில் உள்ள கட்சி பிரிவு, அதன் முன்னாள் தேர்தல் கூட்டணி கட்சியான அகாலி தளத்திற்கு அடிக்கடி ஆதரவாக உள்ளது, அதன் விசுவாசம் அதிகம் என்று குறிப்பிடுகிறது. மஜாவின் இதயமான படாலாவில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஃபதே ஜங் பாஜ்வாவை கட்சி நிறுத்தியுள்ளது, பாஜகவின் ஜகதீஷ் சாஹ்னி மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2007 க்குப் பிறகு இம்முறை வெற்றி பெறுவோம் என்று கட்சித் தொண்டர்கள் நம்புகிறார்கள். காந்தி சௌக்கில் உள்ள ஷூ கடை உரிமையாளர் நரேஷ் ஷர்மா, கட்சியின் வெற்றி உறுதி என்று கூறுகிறார். மேலும், "எங்களிடம் நிறைய அடிமட்ட தொண்டர்கள் உள்ளனர், ஆனால் பெரிய தலைவர் இல்லை, ஃபதேவின் தேர்வு அதை மாற்றிவிட்டது." என்றார்.

எப்போதும் பாஜகவுக்கே வாக்களிப்பதாகக் கூறும் அவரது அண்டை வீட்டாரான மணி பஜாஜ், பிரதமர் மோடியின் இதயம் பஞ்சாபியர்களுக்காகத் துடிக்கிறது என்று அவர் கூறும்போது கட்சியின் சுருதியை எதிரொலிக்கிறார். "பிரதமர் கர்தார்பூர் நடைபாதையை மீண்டும் திறந்தார், அவர் டிசம்பர் 26 அன்று வீர் பால் திவாஸ் என்று அறிவித்தார் (முகலாயர்களால் தூக்கிலிடப்பட்ட குரு கோவிந்த் சிங்கின் நான்கு மகன்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்), 1984 கலவரத்தின் குற்றவாளிகளை அவர் தண்டித்தார். அவர் இங்கு ஆட்சிக்கு வந்தால் இன்னும் பலவற்றைச் செய்வார்” என்றார்.

ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள மால்வாவில் உள்ள ஒரு தொகுதியான பல்லுவானாவில் உள்ள அலம்கர் கிராமத்தில், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் சத் பிரகாஷ், “பாஜகவுக்கு வாக்களிப்பதாக” கூறினார். அனைவரும் வந்தனா சங்வாலுக்கு வாக்களிக்கப் போகிறார்கள்,” என்று அவரது அண்டை வீட்டார் காங்கிரஸின் ராஜிந்தர் கவுர் மற்றும் மற்றொருவர் கூறும்போது, ​​“ஜாடூ-வாலா”வை நீங்கள் ஒதுக்க முடியாது என்றனர்.

தோபாவில் உள்ள பக்வாராவில், பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் விஜய் சாம்ப்லாவை நிறுத்தியுள்ளது, சன்னியின் வேட்புமனுவுக்குப் பிறகு காங்கிரஸுடன் பலத்த போட்டி நிலவுகிறது. இரசாயனக் கடை நடத்தும் ராஜேஷ் குமார், தான் பல ஆண்டுகளாக உறுதியான பாஜக வாக்காளராக இருந்தேன், ஆனால் விலைவாசி உயர்வு வேதனை அளிக்கிறது என்று கூறுகிறார்.

பா.ஜ.க.வைக் குறிப்பிட்டாலே சிரிப்பை வரவழைக்கும் இடங்கள் ஏராளம். "அவர்கள் ஒரு நல்ல வேட்பாளரை நிறுத்தியிருக்கிறார்கள், ஆனால் விவசாயிகளின் எதிர்ப்புகள் வாக்காளர்களை அந்நியப்படுத்திவிட்டன" என்று தல்வாண்டி சபோவில் உள்ள ஒரு வியாபாரி கூறுகிறார். சுனாமில் உள்ள ஜகேபால் கிராமத்தில், ரவிக்குமார் என்ற ஸ்கிராப் வியாபாரி, பாஜகவின் கூட்டணி வேட்பாளர் பற்றி யாருக்கும் தெரியாது என்று கூறுகிறார். சமனாவின் சதர்பூர் கிராமத்தின் கடைக்காரர் கிர்தாரி லால் விளக்குகிறார், "எங்கள் வணிகம் விவசாயிகளைச் சார்ந்தது, பெரிய நகர்ப்புற வணிகர்கள் பாஜகவுக்கு வாக்களிக்கலாம், ஆனால் நாங்கள் விவசாயிகளுடன் எங்கள் பங்களிப்போம்." என்றார்.

இதற்கிடையில், வேட்புமனு தாக்கல் முடிவடைந்தாலும், விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்கள் மஹி கில் மற்றும் ஹாபி தலிவால் முதல் மல்யுத்த வீரர் காளி வரை கட்சியில் தொடர்ந்து புதிய நுழைவுகள் காணப்படுகின்றன. கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர் சுபாஷ் சர்மா, “கடந்த பதினைந்து நாட்களில், எங்களுடன் சேர்ந்த 10 பேரும் ஜாட் சீக்கியர்கள், இந்த விகிதத்தில் எங்களுக்கு இடஒதுக்கீடு தேவைப்படும்,” என்று சிரிக்கிறார்.

கட்சியின் மூத்த தலைவர் சுக்மீந்தர்பால் கிரேவால், பஞ்சாபின் நலனுக்காக மத்திய அரசுடன் இணைவதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வதே இதற்குக் காரணம் என்று கூறுகிறார்.

எவ்வாறாயினும், அடுத்த தேர்தலுக்கு கட்சி தயாராகி வருவதாக அரசியல் விஞ்ஞானி அசுதோஷ் குமார் கூறுகிறார். "இது ஒரு ஆரம்பம், அவர்களுக்கு நீண்ட காலம் தேவைப்படும்" என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment