scorecardresearch

ராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல்! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’

கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

ராகுல் காந்திக்கு வைரஸ் காய்ச்சல்! காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் ‘ஆப்சென்ட்’

கடந்த 1942–ம் ஆண்டு ஆகஸ்டு 8–ந் தேதி, பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தை மகாத்மா காந்தி அறிவித்தார்.

அந்த போராட்டம் தொடங்கப்பட்டு, நேற்றுடன் 75 ஆண்டுகள் நிறைவடைந்தன. இதைக் குறிக்கும் வகையில், காங்கிரஸ் கட்சியில் கொள்கை முடிவு எடுக்கும் உயரிய அமைப்பான காரிய கமிட்டி கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார். காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால், அவர் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட காரிய கமிட்டி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

குஜராத் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜாகவின் கடும் நெருக்கடிக்கு மத்தியில், காங்கிரஸின் அகமது படேல் வெற்றிப் பெற்றதற்குக் கூட, ராகுல் காந்தி இதுவரை எந்தவொரு அறிக்கையும் வெளியிடவில்லை.

முன்னதாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடந்த ஆறு மாதங்களில் ஒரு முறை கூட தனது மக்களவை தொகுதியான அமேதி தொகுதிக்கு செல்லாத நிலையில், அவரைக் காணவில்லை எனக் குறிப்பிடும் சுவரொட்டிகள் அமேதியில் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Rahul gandhi affected by virus fever who was not present in congress meeting

Best of Express