Advertisment

இந்தியாவின் மகள்களின் எதிர்காலத்தை சூறையாடுகிறது; கர்நாடக ஹிஜாப் விவகாரம் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

“அனைவருக்கும் அறிவைத் தருகிறாள் சரஸ்வதி. அவர் வேறுபடுத்திக் காட்டுவதில்லை, ” கர்நாடக ஹிஜாப் விவகாரத்தில் முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட்

author-image
WebDesk
New Update
Congress leader Rahul Gandhi

Congress leader Rahul Gandhi

Robbing future of daughters, says Rahul Gandhi on Karnataka hijab row: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவது குறித்த விவாதம் பெரும் சர்ச்சையாகி வரும் நிலையில், மாணவிகளின் ஹிஜாப் அவர்களின் கல்விக்கு தடையாக இருப்பது இந்தியாவின் பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை சூறையாடுவது போன்றது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை கருத்து தெரிவித்துள்ளார்”.

Advertisment

“அனைவருக்கும் அறிவைத் தருகிறாள் சரஸ்வதி. அவர் வேறுபடுத்திக் காட்டவில்லை, ”என்று ஹிஜாப் அணிந்த முஸ்லீம் மாணவிகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். கர்நாடகாவில் 25 முஸ்லீம் மாணவிகள் வகுப்பில் ஹிஜாப் அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு அவரது கருத்து வந்துள்ளது. முன்னதாக, உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு கல்லூரி, மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு செல்ல தடை விதித்தது.

25 மாணவர்கள் சம்பந்தப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை உடுப்பி மாவட்டத்தில் உள்ள குந்தாப்பூர் அரசு பல்கலைக்கழக கல்லூரியில் நடந்தது, முன்னதாக அங்கு இந்து மாணவர்கள் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதை எதிர்த்து காவி துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர்.

கல்வி நிறுவனங்கள் இரு சமூகங்களின் போர்க்களமாக மாறக்கூடாது என்று கர்நாடக கல்வி அமைச்சர் பி.சி.நாகேஷ் வியாழக்கிழமை தெரிவித்தார். "இது ஒரு புனிதமான இடம், ஒவ்வொரு மாணவரும் சமமாக உணர வேண்டும். இப்போது விவகாரம் நீதிமன்றத்தின் முன் உள்ள நிலையில், என்ன உத்தரவு வருகிறது என்று பார்ப்போம். இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அடுத்த கல்வியாண்டு முதல் பின்பற்றப்படும்,'' என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Karnataka Rahul Gandhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment