காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறு குழந்தையோடு விளையாடி மகிழ்ந்த வீடியோ, சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Congress leader Mr @RahulGandhi ‘s interaction with a child in #Wayanad… ???? pic.twitter.com/kQzcLYecQH
— Supriya Bhardwaj (@Supriya23bh) December 6, 2019
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான கேரள மாநிலம் வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வரும் அவர், பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனை தனது மடியில் உட்கார வைத்து அவர் கொஞ்சி விளையாடினார். அந்த சிறுவனும் ராகுல் காந்தியின் முகத்தை பிடித்துப் பார்த்து விளையாடினான். இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.