காங்கிரஸ் கட்சி தலைவராகிறார் ராகுல்? அக்டோபர் 15 நடக்கப்போவது என்ன?

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் நடத்துவதற்காக ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், சமீபகாலமாக சோனியா காந்தி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருவதால், ராகுல் காந்தி தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதற்காக வரும் அக்டோபர் 15-ஆம் தேதி, சோனியா காந்தி பதவி விலக முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸ் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

×Close
×Close