குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது என்று ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

பாஜக சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளராக ராம்நாத் கோவிந் களம் இறங்கியுள்ளார். பிரதமர் நேரந்திர மோடி, பாஜக தலைவர் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆகியோர் முன்னிலையில் ராம்நாத் கோவிந்த் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் ராம்நாத் கோவிந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புகழ்பெற்ற தலைவர்கள் பலர் குடியரசுத் தலைவர்கராக பணியாற்றியிருக்கின்றனர். எனவே குடியரசுத் தலைவர் என்ற பதவிக்கு மரியாதை சேர்க்கும் வகையில் நான் எனது கடமையை சிறப்பாக ஆற்றுவேன். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்த்துக்கொள்கிறேன்.

குடியரசுத் தலைவர் பதவி என்பது அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டது. நான் ஆளுநராக பாதவியேற்றது முதல் எந்த கட்சியையும் சார்ந்து செயல்படவில்லை என்று கூறினார்.

×Close
×Close