புதிய ஒரு ரூபாய் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு கொண்டு வர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டாலும் தற்போது புழக்கத்தில் இருக்கும் ஒரு ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒரு ரூபாய் நோட்டானது பார்ப்பதற்கு பிங் மற்றும் பச்சை நிறத்தில் இருக்குமாம். அதோடு மற்ற நிறங்களின் கூட்டுக்கலவையும் இதில் காணப்படுமாம். மேலும், பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளார் சக்திகாந்த தாஸின் கையெழுத்து ஒரு ரூபாய் நோட்டில் இடம் பெற்றிருக்கும். இந்த புதிய ஒரு ரூபாய் நோட்டுகள் ஏற்கெனவே அச்சடிக்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். கறுப்புப் பணத்தை ஒழிக்கும் விதமாகவும், போலியான ரூபாய் நோட்டுகளை ஒழிக்கும் வகையிலும் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும், பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளுக்கு பதிலாக புதியதாக ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.