ஜியோபோன் என்ற 4ஜி வோல்ட்இ வசதியுடன் கூடிய ஃபீச்சர் போனை முகேஷ் அம்பானி அறிமுகம் செய்துள்ளார்.
இந்தியாவின் ஸ்மார்ட்ஃபோன் என்ற வாசகத்துடன் இந்த ஃபோன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரிதான ஸ்கிரீன், 4ஜி சப்போர்ட் என்ற அம்சங்களை கொண்ட இந்த ஃபோனை இலவசமாக வழங்க இருப்பதாக முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
இந்த ஜியோபோனுக்கான முன்பதிவு ஆகஸ்ட் 24-ம் தேதி தொடங்குகிறது. முதலில் வருபவருக்கே முன்னிரிமை என்ற அடிப்படையில் விற்பனைக்கு வருகிறது என்பதால் யார் வேண்டுமானாலும் இதனை வாங்கிக் கொள்ள முடியும். இதற்காக வாரத்திற்கு 50 லட்சம் ஃபோன்களை உற்பத்திய செய்ய ஜியோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக முகேஷ் அம்பானி கூறும்போது: ஜியோபோனில் செய்யப்படும் வாய்ஸ் கால்கள் அனைத்தும் இலவசம். அதோடு, ஜியோபோனில் அன்லிமிடெட் டேட்டாவும் வழங்கப்படுகிறது. இதுபோன்ற சலுகைகளை மற்ற நிறுவனங்களிடம் இருந்து பெற வேண்டுமானால் மாதத்திற்கு ரூ.5000 செலவாகும்.
இந்த ஜியோஃபோனுக்கு, முதல் மாத சந்தாவாக ரூ.153 செலுத்துவது போதுமானது. இதேபோல, ரூ.54-க்கு வாராந்திர ஃப்ளான், ரூ.24-க்கு இரண்டு நாட்கள் ஃப்ளான் உள்ளன. இந்த ஃபோனை பெற காப்பீட்டுத்தொகையாக ரூ.1500 செலுத்த வேண்டும். மேலும், 36 மாதங்களில் இந்த தொகை திருப்பி அளிக்கப்படும். அதன்படி இந்த ஃபோன் முற்றிலும் இலவசமாக கிடைக்கப்பெறும் என்று கூறினார்.
இந்திய இன்ஜினிர்களால் ஜியோஃபோன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜியோஃபோனில் இருந்து தொலைக்காட்சி மூலம் வீடியோவை பார்ப்பதற்கு வசதியாக கேபிள் லிங்-ம் வழங்கப்படுகிறது. இதற்காக கூடுதலான டேட்டாவை பெறுவதற்கு வாடிக்கையாளர்கள் “தன் தனா தன்” ப்ளானில் ரூ.309-க்கு ரீசார்ச் செய்ய வேண்டும். குறிப்பிடும்படியாக, ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள இந்த ஜியோஃபோன் ஃபீச்சர்போன் தான் என்ற போதிலும், வாய்ஸ் கமான்ட்-க்கு பதிலளிக்கக்கூடியது என்பது குறிப்பிடத்க்க அம்சமாகும். ஃபீச்சர்போன் வரலாற்றில் இது புது அம்சமாக பார்க்கப்படுகிறது.
முகேஷ் அம்பானி மேலும் கூறும்போது: எங்கள் நறுவனத்தின் நோக்கமானது மக்களிடையே தொடர்பை ஏற்படுத்துவது, டேட்டா மற்றும் சாதனத்தை குறைந்த விலையில் வழங்குதல் என்பதே ஆகும். இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மக்கள், டேட்டாக்களை பயன்படுத்துவதில் சந்தித்து வரும் பிரச்சனைகள் நீங்கும்.
ஜியோவின் வருகையால், இந்தியாவில் 4ஜி சேவையானது 2ஜி சேவையை விட அதிகரிக்கும். வரும், செப்டம்பர் மாதத்திற்குள்ளாக, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் 10,000 ஜியோ அலுவலகத்தை திறக்க திட்டமிட்டுள்ளோம்.
இந்தியாவின் ஜியோவிற்கு 125 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். விரைவில் அதிக வாடிக்கையாளர்களை பெற்ற நிறுவனம் என உலக சாதனைகளை படைத்த ஜியோ, உலகின் மிகப்பெரிய மொபைல் வீடியோ நெட்வொர்க்-ஆக திகழ்கிறது.
குறிப்பிடும்படியாக, 170-நாட்களில் 100 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஜியோ-வில் இணைந்தனர். இதுதான் உலகிலேயே தொழில்நுட்ப சேவை ஒன்று பெற்ற அதிவேக வளர்ச்சியாகும். ஜியோ நிறுவனம் பேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்கைப் போன்றவற்றைவிட வேகமான வளர்ச்சியடைந்தது. தற்போது 125 மில்லியன் வாடிக்கையாளர்களை ஜியோ பெற்றுள்ளது. இதன்மூலம், தினமும் வாய்ஸ் கால், வீடியோ கால் என தினமும் 250 கோடி நிமிடங்களை ஜியோ வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், இந்தியாவில் டேட்டா பயன்பாட்டானது அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளைவிட அதிகரித்துள்ளது என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.