கேரளாவில் 14 வயது சிறுமியை பயன்படுத்தி ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் கடந்தாண்டு போலியான செய்தியை ஒளிபரப்பியதாகக் கூறி, ஆளும் சி.பி.எம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்.எப்.ஐ கொச்சியில் உள்ள ஏசியாநெட் நியூஸ் அலுவலகத்தை முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து நேற்று (சனிக்கிழமை) அந்நிறுவனத்தின் 3 பத்திரிகையாளர்கள் மீது போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் கோழிக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
ஏசியாநெட் நியூஸின் நிர்வாக ஆசிரியர் சிந்து சூர்யகுமார், மண்டல ஆசிரியர் ஷாஜகான் காளியத் மற்றும் கண்ணூர் நிருபர் நவுஃபெல் பின் ஜோசப் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏசியாநெட் செய்தி சேனலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சி.பி.எம் 14-மாவட்ட தலைமையகங்களில் மாநாடு நடத்தினர். "கிரிமினல் ஜர்னலிசம்" என்று குற்றஞ்சாட்டினர். மாநிலத்தில் போதைப்பொருள் குறித்து செய்தி வெளியிட்டது. “Narcotic is a dirty business’’ என்ற தலைப்பில் செய்தியை தொகுத்து வழங்கியது. இது அங்கு பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
நவம்பர் 10-ம் தேதி, கண்ணூரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவியின் நேர்காணலை சேனல் ஒளிபரப்பியது. அந்த வீடியோவில் அவர் கூறுகையில் என்னை கட்டாயப் படுத்தி போதைப் பொருள் கொடுத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டபின் என்னை abuse செய்தார்கள் என்று கூறியுள்ளார்.
போதைப் பொருள் மாஃபியாவிடம் என்னைப் போன்று 10க்கும் மேற்பட்ட சிறுமிகள் சிக்கியதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் இது பொய்யான செய்தி என ஆளும் கட்சி கூறியுள்ளது. மேலும் ஏசியாநெட் ஒரே நபருடன் இரண்டு வெவ்வேறு தருணங்களில் வீடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி ஒளிபரப்பான முதல் செய்தியில் பெண் நிருபர் ஒருவர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேட்டி எடுக்கிறார். ஆண் போன்ற குரல் கொண்ட ஒருவரிடம் பேட்டி எடுக்கிறார்.
நவம்பர் 4-தேதி வெளியான 2-வது தொடர் செய்தியில் நிருபர் யூசுப், பேட்டி எடுக்கிறார். அப்போது பெண் குரல் கொண்ட பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பேட்டி எடுக்கிறார். ஆனால், இரண்டு சந்தர்ப்பங்களிலும், பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மாதிரியான சம்பவங்களையும் அதிர்ச்சிகளையும் விவரித்தனர்.
இந்த குற்றச்சாட்டுக்கு ஏசியாநெட் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித பதிலும் அளிக்கவில்லை. மாறாக வீடியோவில் உள்ள சிறுமியின் தந்தை, தனது மகள் சொன்னது உண்மை என்று கூறியுள்ளார். அதை வீடியோவாக ஏசியாநெட் ஒளிபரப்பியது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் எம்.வி.கோவிந்தன் கூறியதாவது, ஏசியாநெட் செய்தியின் போலிச் செய்தியை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்று கூறினார்.
“இது மோசமான செய்தி. ஏசியாநெட்டின் இந்த போலிச் செய்தி, கேரளாவில் உள்ள வலதுசாரி ஊடகங்கள், கேரளாவில் ஆளும் எல்.டி.எஃப் அரசாங்கத்தை தரக்குறைவாகக் காட்ட முயல்கின்றன என்பதையே காட்டுகிறது’’ என்று சிபிஎம் தலைவர் திருச்சூரில் கூறினார்.
கேரளாவில் சிபிஎம் கட்சிக்கும் ஏசியாநெட்டிற்கும் முரண்பாடுகள் உள்ளன. கடந்தாண்டு சிபிஎம் ராஜ்யசபா உறுப்பினர் எளமரம் கரீம் அந்த நிறுவனத்தின் செய்தி தொகுப்பாளர் வினு வி ஜானுக்கு எதிராக புகார் அளித்தார். அதன்பின் முரண்பாடுகள் அதிகரித்தன. ஏசியாநெட் தொலைக்காட்சி விவாதங்களில் சிபிஎம் பங்கேற்காது என கட்சி அறிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/