சபரிமலை கோவில் நடை திறப்பு: பக்தர்கள் தங்க அனுமதி இல்லை

கோவிட் சான்றிதழ் இல்லாத பக்தர்கள் அனைவரும், நிலக்கலில் ரேபிட் ஆன்டிஜென் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

Sabarimala, Sabarimala news, Sabarimala online ticket, Sabarimala latest news in tamil, Sabarimala temple opens for devotees, sabarimala temples tamil nadu , சபரிமலை கோயில் , சபரிமலை செய்திகள் , ஐயப்ப பக்தர்கள்,

கேரளாவில், கோவிட்-19 தொற்று காரணமாக ஆறு மாத காலமாக மூடப்பட்டிருந்த சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.  கோவிட்-19  தொற்று பாதிப்பு இல்லை என்ற சான்றிதழுடன் பக்தர்கள் வருகை தந்தனர்.

வெள்ளிக்கிழமை மாலை மாதாந்திர பூஜைக்காக திறக்கப்பட்ட சபரிமலை கோயில், பக்தர்களின் வருகைக்காக அக்டோபர் 21 வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. கோவிட் சான்றிதழ் இல்லாத பக்தர்கள், நிலக்கலில் ரேபிட் ஆன்டிஜென் ரேபிட் ஆன்டிஜென் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

மார்ச் 25ம் தேதி, நாடு தழுவிய முழு அடைப்பு காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு கேரளாவில் கோவில்கள் திறக்கப்பட்டாலும், சபரிமலை ஐயப்பன்கோவில் திறக்கப்படவில்லை. கோவில் நடை திறக்கப்பட்டால் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்றும், அப்போது, நோய்த்தொற்றுக்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும் என்று அரசு உயரதிகாரிகள் மாநில அரசிடம் தெரிவித்ததை அடுத்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை தரிசனத்திற்காக ஆன்-லைன் முன்பதிவு மூலமாக 246 பேர் விண்ணப்பித்திருந்தனர். தினமும் 250 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இருப்பினும், வழக்கமான உற்சாகம் சபரிமலையில் காணப்படவில்லை என்று கருத்தும் நிலவுகிறது.

மாதாந்திர பூஜைக்காக நேற்று (அக்டோபர் – 16) மாலை கோயில் நடை திறக்கப்பட்டிருந்தாலும், துலாம் மாதத்தின் முதல் நாளான இன்று தான் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

10-60 வயதுக்கு உட்பட்டவர்கள், சபரி மலையேற்றதற்கு  தகுதியானவர்கள் என்று மருத்துவ சான்றிதழ் வைத்திருக்கும் மட்டுமே பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

நோய்த் தொற்று காரணமாக, பக்தர்கள் சன்னிதனம், நிலக்கல், பம்பாவில் தங்க அனுமதிக்கப்பட வில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sabarimala temple opens for devotees till october 21 covid 19 negative certificate

Next Story
உணவு மற்றும் விவசாய அமைப்பின் 75வது ஆண்டு தினம் : ரூ.75 நாணயம் வெளியீடுPM Modi releases Rs 75 coin to mark 75th year of FAO
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X