பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான மாநிலம்: தமிழகம் முதலிடம்!

தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது இந்தக் காலக்கட்டத்தில் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2014- 2015 ஆண்டுகளில் நாடு முழுவதும் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை அடிப்படையாக வைத்து பட்டியல் ஒன்றை மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில் பத்திரிக்கையாளர்கள் மீது இந்தக் காலக்கட்டத்தில் எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், ‘பத்திரிகையாளர்கள் சுதந்திரத்தில்’ தமிழகத்திற்கு முதலிம் அளிக்கப்பட்டுள்ளது.

இதே போல் ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, தெலங்கானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என கூறியுள்ளது.

அதேசமயம், நாட்டிலேயே உத்திரபிரதேச மாநிலத்தில் தான் தாக்குதல் சம்வங்கள் அதிகம் நடைபெற்றுள்ளது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லை பிரச்சனை அதிகம் உள்ள வடகிழக்கு மாநிலங்களிலில் அருணாச்சல பிரதேசம், சிக்கீம், மிசோரம் மாநிலங்களில் தாக்குதல் சம்பவங்கள் அதிகம் நடைபெறவில்லை என்றும், யூனியன் பிரதேசங்களில் எந்த மாநிலத்திலும் தாக்குதல் சம்பவங்கள் நடைபெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீகாரிலும் கடந்த ஒருவருடத்தில் 3 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close