இரு வழக்குகளில் சாமியார் ராம்பால் விடுதலை: நிலுவையில் இன்னும் 8 வழக்குகள்

ராம்பால் விடுவிக்கப்பட்டாலும், சிறையில் தான் அவர் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் மீதான சுமார் எட்டு வழக்குகளில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
Sant Rampal verdict, haryana, punjab

சர்ச்சை சாமியார் ராம்பால் இரு வழக்குகளில் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர் மீதான இன்னும் 8 வழக்குகள் தீர்ப்புக்காக காத்திருக்கின்றன.

Advertisment

ஹரியானா மாநிலம் ஹிசாரில் ஆசிரமம் அமைத்து சாமியாராக வலம் வந்தவர் ராம்பால். சர்ச்சைகளுக்கு பெயர் போன சாமியார் ராம்பால் மற்றும் அவரது ஆதரவளார்கள், ரோஹ்தக் கிராம வாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்தும், மேலும் பலரை படுகாயமடைய செய்த வழக்கில் சிக்கினர்.

இதுதொடர்பான வழக்கில் கைது நடவடிக்கைகளை தவிர்த்து வந்த ராம்பால், சுமார் 43 முறை நீதிமன்றத்தில் ஆஜராகாமலும் தவிர்த்து வந்தார். இதனால், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், அவரை கைது செய்வது காவல்துறைக்கு அவ்வளவு எளிதில் முடிந்து விட வில்லை. ராம்பால் ஆதரவாளர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டு போலீஸில் சிக்காமல் 12 ஏக்கர் நிலப்பரப்புள்ள ஆசிரமத்துக்குள் சாமியார் ராம்பால் பாதுகாப்பாக இருந்து வந்தார். சுமார் இரு வாரங்கள் நடைபெற்ற மோதலில் முடிவில் சாமியாரின் ஆதரவாளர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டு, சாமியார் ராம்பாலை போலீசார் கைது செய்தனர்.

Advertisment
Advertisements

காவல்துறை மற்றும் சாமியார் ஆதரவாளர்களுக்கிடையே நடைபெற்ற தாக்குதலில் ஐந்து பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உள்பட ஆறு பேர் உயிரிழந்தனர். ஆசிரமத்தில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக ராம்பால் மற்றும் 11 பேர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அது தவிர பல்வேறு வழக்குகளும் அவப்ர் மீது உள்ளன.

கைது செய்யப்பட்ட சாமியார், ஹிசார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறை வளாகத்திலேயே சிறப்பு நீதிமன்றம் அமைக்கத்து அவர் மீதான வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த வழக்குகள் மீதான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அதில், இரண்டு குற்ற வழக்குகளில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். புகார்தாரர்கள் மற்றும் சாட்சியங்கள் பிறள் சாட்சியாக மாறியதால் வழக்கில் இருந்து சாமியார் ராம்பால் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இரு வழக்குகளில் இருந்து ராம்பால் விடுவிக்கப்பட்டாலும், சிறையில் தான் அவர் இருக்க வேண்டும். ஏனெனில், அவர் மீதான சுமார் எட்டு வழக்குகளில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதில், ரோஹ்தக் கிராம வாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்த வழக்கும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Punjab Haryana Gurmeet Ram Rahim Singh Sant Rampal

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: