வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தந்த எஸ்பிஐ வங்கி!

முதியோருக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதத்திலிருந்து, 6.75 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது

பாரத ஸ்டேட் வங்கியில், இரண்டு முதல் மூன்று ஆண்டுகள் வரையிலான வைப்புத்தொகைக்கு 6.75 சதவிகிதம் வட்டி வழங்கப்பட்டு வருகிறது. இந்த வட்டி விகிதம், இனி 6.25 சதவிகிதமாக குறைக்கப்பட உள்ளதாக எஸ்பிஐ அறிவித்துள்ளது.

அதேபோல், முதியோருக்கான வட்டித் தொகையும் 7.25 சதவிகிதத்திலிருந்து, 6.75 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும், மூன்று ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகள் வரையிலான நிலையான வைப்புத் தொகைக்கான வட்டித் தொகை 6.75 சதவீதத்திலிருந்து 6.50 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், ஏழு நாள் முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டியில் மாற்றமில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

இந்த புதிய வட்டி விகிதங்கள் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளன.

×Close
×Close