கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான சிஎஸ் கர்ணனுக்கும், உச்ச நீதிமன்றத்திற்கும் மோதல் போக்கு நிலவிவந்தது. இதனிடையே உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கும் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார் சிஎஸ் கர்ணன்.
இதனைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு கட்டுப்படாததால் சிஎஸ் கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிஎஸ் கர்ணனை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் மேற்குவங்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டது. கடந்த மே 9-ம் தேதி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இன்னமும் சிஎஸ் கர்ணனை போலீஸாரால் கைது செய்யமுடியவில்லை.
இதனிடையே உச்ச நீதிமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்யக் கோரி, சிஎஸ் கர்ணன் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சிஎஸ் கர்ணன் தரப்பில் முறையிடப்பட்டது. ஆனால், அதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், சிஎஸ் கர்ணன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்ற பதிவாளர் நிராகரித்துள்ளார்.