குஜராத் கலவர வழக்கில் மோடி விடுவிக்கப்பட்டது சரியா ? நவம்பர் 19ம் தேதி விசாரணை...

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஷான் ஜஃப்ரி மனைவி தொடுத்த வழக்கில் முக்கிய விசாரணையை மேற்கொள்ள உள்ளது உச்ச நீதிமன்றம்.

நரேந்திர மோடி குஜராத் கலவரம் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டது சரியா என விசாரணை செய்ய உள்ளது உச்ச நீதிமன்றம்.  2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில் எண்ணற்ற அப்பாவி பொது ஜனங்கள் உயிரிழந்தனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட பல முக்கிய குற்றவாளிகள் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

2002ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் போது அம்மாநிலத்தின் முதல்வராக இருந்தவர் நரேந்திர மோடி. கோத்ரா வன்முறைக்கு காரணமானவர்கள் பட்டியலில் இருந்து நரேந்திர மோடியின் பெயர் நீக்கம் செய்ப்பட்டது.

நரேந்திர மோடி குஜராத் கலவரம் வழக்கில் இருந்து விடுவிப்பு

2002ம் ஆண்டு குல்பர்க் குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற கலவரத்தின் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் எஷான் ஜஃப்ரி கொல்லப்பட்டார். அவருடைய மனைவி ஜக்கியா ஜஃப்ரி இந்த இனக்கலவரத்திற்கு பின்னால் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசு அதிகாரிகள் இருப்பதாக கூறி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்.

ஆனால் நரேந்திர மோடி குற்றமற்றவர் என்று நற்சான்றிதழ் வழங்கியது சிறப்பு புலனாய்வுக்குழு (எஸ்ஐடி). இதனைத் தொடர்ந்து அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜக்கியாவின் புகார் பட்டியலில் சுமார் 58 நபர்களின் பெயர்கள் இணைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு தக்க ஆதாரங்கள் இல்லை என்று கூறி அனைவரையும் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து மேல் முறையீடு ஜக்கியா மேல் முறையீடு செய்தார். அந்த வழக்கினை நவம்பர் 19ம் விசாரணை செய்ய உள்ளது உச்ச நீதிமன்றம். இது தொடர்பான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close