முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தாங்கள் தான் உண்மையான சிவசேனா, சிவசேனாவின் வில் அம்பு சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். இதை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நேற்று (செப்.27) வழக்கு விசாரணையின் போது, ஷிண்டே மனு மீது தேர்தல் ஆணையம் முடிவுவெடுப்பதை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.
மகாராஷ்டிராவில் கடந்த ஜூன் மாதம் சிவசேனா ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்எல்ஏக்கள் உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக போர்க் கொடி தூக்கினர். இதன் விளைவாக தாக்கரே அரசு கவிழ்ந்து. ஷிண்டே பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபித்து ஷிண்டே முதல்வராக பதவியேற்றார். இதையடுத்து சிவசேனா கட்சி பெயர், சின்னம் யாருக்கு என இருஅணிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்தநிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி தாங்கள் தான் உண்மையான சிவசேனா, சிவசேனாவின் வில் அம்பு சின்னம், கட்சி பெயர் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தனர். தேர்தல் ஆணையத்தில் ஷிண்டே தொடர்ந்த மனுவை எதிர்த்து உத்தவ் தாக்கரே உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தொடர்ந்தார். இந்த மனு நேற்று (செப்.27) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் ஆணையம் முடிவுவெடுப்பதை நீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது. இதனால் மகாராஷ்டிரா அரசியல் சூடுபிடித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு உத்தவ் தாக்கரே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஷிண்டே அணியைச் சேர்ந்த அமைச்சர் தீபக் கேசர்கர் கூறுகையில், " கட்சியின் சின்னம் மீதான வழக்கில் தேர்தல் ஆணையம் முடிவு எடுப்பதை தடை போட நினைத்த உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உரிய பதிலடி" என்றார்.
ஆதித்யா தாக்கரே கூறுகையில், "இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இருந்து தேர்தல் ஆணையத்திற்கு மாறியுள்ளதால், இது யாருக்கும் அதிர்ச்சியோ. நிவாரணமோ அல்ல. தேர்தல் ஆணைய விசாரணைக்கு தயாராக உள்ளோம்" என்றார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து ஷிண்டே மற்றும் உத்தவ் அணிகள் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரா பாஜக பொதுச் செயலாளர் ஸ்ரீகாந்த் பாரதியா கூறுகையில், " உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். சிவசேனாவின் சின்னம் குறித்து முடிவு செய்ய தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தேர்தல் ஆணையம் சரியான முடிவை எடுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
ஜூன் 19, 1966 அன்று பால் தாக்கரேவால் சிவசேனா உருவாக்கப்பட்டது. இதற்கு "வில் மற்றும் அம்பு" என்ற சின்னம் ஒதுக்கப்பட்டது. 2012இல் பால் தாக்கரேவின் மறைவுக்குப் பின், அவரது மகன் உத்தவ் தாக்கரே சிவசேனா தலைவராகப் பொறுப்பேற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“