பாஜக குடியரசுத் தலைவர் வேட்பாளருக்கு சிவசேனா ஆதரவு!

குடியரசுத் தலைவர் தேர்தலில் ராம்நாத் கோவிந்துக்கு ஆதரவு அளிப்பது என சிவசேனா முடிவுசெய்துள்ளது.

இது குறித்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ககரே அக்கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்தின் இறுதியில், பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை சிவசேனா ஆதரிப்பது என முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்

இது தொடர்பாக அவர் கூறியதாவது: சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்களுடன் இணைந்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த ஆலோசனையின் போது பாஜக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் ரம்நாத் கோவிந்தை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது. ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக பதவியேற்றபின், வரும்காலங்களில் நாடு செழிப்படையும் என நாங்கள் நம்புகிறோம் என்று தெரிவித்தார்.

சிவசேனா கட்சியானது கடந்த சில மாதங்களாக ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் மற்றும் அறிவியல் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோரை தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் குடியரசுத் தலைவர் வேட்பாளாராக நிறுத்த பரிந்துரை செய்து வந்தது. இந்நிலையில், பாஜக நிறுத்திய வேட்பாளருக்கு தனது ஆதரைவை தெரிவித்துள்ளது.

முன்னதாக உத்தவ் தாக்கரே கூறும்போது: தலித் சமூகத்தின் வாக்குகளை பெறுவதற்காக குடியரசுத் தலைவர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அதனை சிவசேனா ஆதரிக்காது. நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்களின் பயன்பெறும் வகையில் ஒரு வேட்பாளர் நிறுத்தப்படவேண்டும் என்று கூறியிருந்தார்.

×Close
×Close