வரும் பிப்ரவரி 28,2018 க்குள் ஆதார் கார்டு எண்ணை இணைப்பது கட்டாயமாக தவறினால் செல்போன் எண் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் போலி சிம் கார்டுகளை பயன்படுத்தி சமூக விரோதிகள் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வருவது அதிகரித்துள்ளது. தீவிரவதிகளும் போலி சிம்கார்டுகள் மூலம் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
இது போன்ற சிம்கார்டுகள் போலி அடையாள அட்டைகளை கொடுத்தே வாங்குவது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் குற்றச் செயல்களில் ஈடுபடுவோர்களை தேடி கண்டுபிடிப்பது போலீசாருக்கு சிரமமான காரியமாகவே இருந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு செல்போன் சிம்கார்டுடன் ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதன்பின்னர் பொதுமக்கள் தங்களது செல்போன் எண்ணுடன் ஆதார் எண்களை இணைத்து வருகிறார்கள்.
மேலும், வங்கி கணக்கு, எரிவாயு, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மொபைல் எண் உட்பட அனைத்து அரசு சார்ந்த நல உதவிகள் மற்றும் தனியார் நிறுவனம் சார்ந்த அடையாளங்களுக்கும் ஆதார் கட்டாயாமக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், செல்போன் எண்ணுடன் ஆதார் எண் இணைக்கப்படாத சிம் கார்டுகள், வரும் 28, 2018 பிப்ரவரி மாதத்துக்குப் பின் இணைப்பு துண்டிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்திய வழிகாட்டுதலின் படி சிம் கார்டுகள் செயலிழப்பு செய்யப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
மொபைல் எண்ணுடன் ஆதார் இணைப்பது எப்படி ?
உங்களுடைய பயன்பாட்டில் உள்ள எந்த சிம் கார்டுகளையும் ஆதார் எண்னை இணைக்க அருகில் உள்ள மொபைல் ரீடெயிலர் அல்லது அதிகாரப்பூர்வ தொலைத்தொடர்பு நிறுவன ரீடெயிலரிடம் சென்று இணைத்துக் கொள்ளலாம்.
ஜியோ சிம் பயனாளர்கள், ஆதார் கொண்டு சிம் வாங்கியவர்கள் இணைக்க வேண்டிய அவசியமில்லை.
விமான டிக்கெட்டிற்கும் ஆதார் கட்டாயம்:
NFL-ன் விதிமுறைகளின்படி, இனி விமானப்பயணிகள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய கட்டாயமாக ஆதார் கார்டு எண், டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட் எண் மற்றும் பான் எண்களை கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் விரைவில் இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளதாக NFL தெரிவித்துள்ளது. பயணிகள் ஆதார் எண்களை கொடுத்த பிறகு பயணிகளுக்கென தனியாக கார்(CAR) எனப்படும் கார்டு வழங்கப்படும்.
இதனை டி.ஜி.சி.ஏ. தயார் செய்து கொடுக்கும். இதன் மூலம் பயணிகள் எந்த சிரமும் இன்றி விமானத்தில் எளிதாக பயணம் செய்யலாம்.