தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை தாக்க முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இருவரை போலீஸார் கைது செய்தனர்.
தில்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பத்திரிக்கையாளர்களை சந்திக்க இருந்த வேளையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த தாக்குதல் முயற்சியின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பட்டது. தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து தெரியாத நிலையில், இதற்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இது சம்பவம் தொடர்பாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறும்போது: இது இந்திய ஜனநாயத்தின் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் மதச்சார்பற்ற பொதுவான நபர் நிறுத்த வேண்டும் என தொடர்ந்து சீதாராம் யெச்சூரி வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.