புதிய வேளாண் மசோதாவை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளில் உச்ச நீதிமன்றம் ஏமாற்றத்தை வெளிப்படுத்தி இருந்தது. மேலும், குழு அமைக்கவும், அந்த குழுவின் முன்பு பேச்சு வார்த்தைகளுக்கான சூழ்நிலையை எளிதாக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் அமல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களை அலைபேசியில் மூலம் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். அதில் எதிர்க் கட்சிகளோடு இணைந்து விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் களமிறங்க திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இதற்கிடையில் என்சிபி தலைவர் சரத் பவார் இடது சாரி தலைவர்களான சீதாராம் யெச்சூரி மற்றும்டி ராஜாவை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். அதில் விவசாயிகளின் போராட்டம் குறித்து விவாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
“நாங்கள் உச்சநீதிமன்றத்தையும் அதன் அக்கறையையும் மதிக்கிறோம். ஆனால் வேளாண் சட்டங்களை ரத்து செய்வது மற்றும் ரத்து செய்வதற்கான ஆணை வழங்கும் அதிகாரம் அரசாங்கத்திடம் தான் உள்ளது, உச்சநீதிமன்றத்திடம் அல்ல” என்று காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook
Web Title:Sonia ghandhi organise mega protest to support delhi farmer protest
வருமான வரி சோதனை : பால் தினகரன் வீடுகளில் தங்கம் மற்றும் 120 கோடி பறிமுதல்
என் பெயரை மிஸ் யூஸ் பண்றாங்க: வீடியோவில் வருத்தப்பட்ட விஜய் டிவி நடிகை
கட்சி விளம்பரத்திற்கு அரசு நிதி : அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக பரபரப்பு புகார்
10ம் வகுப்பு தேர்ச்சி போதும்: இந்திய ரிசர்வ் வங்கியில் பாதுகாப்பு காவலர் பணி
சென்னை டெஸ்டில் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் உறுதி