Advertisment

நெஞ்சில் ஐயப்பன்... கழுத்தில் அரிவாள்... போட்டோஷாப் செய்து காவல்துறையிடம் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர்

போலியான புகைப்படங்களை தயாரித்து வெளியிட்டதால் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது : சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபாடு நடத்த செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் செப்டம்பர் மாதம் 28ம் தேதி ஒரு வரலாற்றுத் தீர்ப்பினை அறிவித்தது. ஆனால் இதற்கு ஐயப்ப பக்தர்கள், தலைமை தந்திரி குடும்பத்தினர் மற்றும் பந்தளம் ராஜ குடும்பத்தினர் இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களை ஒன்று திரட்டி போராட்டங்கள் நடத்தினர்.

Advertisment

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 16ம் தேதி மண்டல பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது. அப்போது கோவிலில் தரிசனம் செய்ய பெண் பக்தர்கள் முயற்சி செய்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அவர்கள் யாரையும் உள்ளே நுழைய விடவில்லை. போராட்டக்காரர்கள் கோவிலிற்குள் வந்த பத்திரிக்கைக்காரர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கவும் காவல்துறையினர் நிலைமையை கட்டுப்படுத்த போராட்டக்காரர்களை காடுகளுக்குள் துரத்தி அடித்தனர்.

சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் கைது

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கேரள மாநிலம், மன்னார் மாவட்டத்தில் இருக்கும் ராஜேஷ் குருப் என்பவர் சபரிமலை ஐயப்பன் சிலையை நெஞ்சில் வைத்திருப்பது போலவும், காவல் துறையினர் அவரை காலால் எட்டி உதைப்பது போலவும், கழுத்தில் அரிவாள் வைத்திருப்பது போலவும் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் சற்று நேரத்தில் வைரலாகவும், சர்ச்சையாகவும் மாறியது.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று டெல்லியில், டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் தஜீந்தர் பக்கா தலைமையில் சபரிமலையில் பெண்களின் அனுமதிக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டம் ஒன்று நடத்தப்பட்டது. அதில் ராஜேஷ் குரூப்பின் புகைப்படம் மற்றும் 100 crore Hinduon ki aastha par prahaar band karo (100 கோடி இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தாதீர்கள்) என்ற வாசகம் அடங்கிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கபில் மிஷ்ராவும் கலந்து கொண்டார்.

சபரிமலை விவகாரம் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் கைது சபரிமலை விவகாரம் தொடர்பாக டெல்லியில் வெளியிடப்பட்ட போஸ்டர்

ஆனால் ராஜேஷ் குருப் பதிவிட்ட புகைப்படங்கள் யாவும் போலியானவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ராஜேஷ் குருப் மீது விரோத போக்கினை மேம்படுத்துதல் தண்டனைச் சட்டம் 153, அவதூறுச் சட்டம் 500, பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் தண்டனைச் சட்டம் 118 மற்றும் ஒழுங்கு விதிமீறல் சட்டம் 120 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மேலும் படிக்க : சபரிமலை நோக்கி ரத யாத்திரை செல்லும் பாஜக

Kerala Sabarimala
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment