மத்திய அரசு கொண்டுவந்துள்ள 3 வேளான் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மற்றும் அரியானா விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து 20-வது நாளாக நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு இந்தியா முழுவதும் பல்வேறு விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சமாதாப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. ஆனால் அனைத்து பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்த்தால், விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த ஹரியானாவின் கர்னல் மாவட்டத்தில் ஒரு குருத்வாராவைச் சேர்ந்த சீக்கிய சாமியார், சாண்ட் பாபா ராம் சிங் (65) நேற்று (புதன்கிழமை) தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும் அவர் தனது உரிமம் பெற்ற துப்பாக்கி மூலம் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது,
இது குறித்து குண்ட்லி காவல் நிலைய எஸ்.எச்.ஓ ரவி குமார் கூறுகையில், பாபா ராம் சிங் பயன்படுத்திய ஆயுதத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை ஆனால் அவர், தற்கொலை செய்து கொண்டார் என்று அவரது கூட்டாளிகள் போலீசாருக்கு அறிக்கை அளித்துள்ளனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், பாபா ராம் சிங் தற்கொலை செய்வதற்கு முன் எழுதியுள்ள கடித்ததில்,
விவசாயிகளின் வேதனையை கண்டு மனமுடைந்தேன். அவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக சாலைகளில் போராடுகிறார்கள். இதைப் பார்த்து என் இதயம் மிகவும் வேதனை அடைந்தது. இது அநீதி. ஒருவரை ஒடுக்குவது பாவம். அடக்குமுறையை சகித்துக்கொள்வதும் ஒரு பாவம். மக்கள் விவசாயிகளுடன் தங்கள் ஒற்றுமையையும், இந்த அநீதிக்கு எதிரான கோபத்தையும் பல்வேறு வழிகளில் காட்டியுள்ளனர்.
சிலர் தங்கள் கோபத்தை வெளிப்படுத்த தங்கள் விருதுகளை திருப்பி அனுப்பியுள்ளனர் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அட்டூழியங்களுக்கு எதிராகவும் நான் எனது வாழ்க்கையை எடுத்துக்கொள்கிறேன். இது அநீதிக்கு எதிரான குரல். இது கடின உழைப்பாளி விவசாயிகளுக்கு ஆதரவான குரல் என எழுதியுள்ளார்.”
உடல் பிரேத பரிசோதனைக்காக கர்ணலுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர் அவரது சொந்த ஊரான சிங்ரா கிராமத்தில் உள்ள நானாக்ஸர் குருத்வாராவுக்கு கொண்டு செல்லப்படும் என்றும், அவரது இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை (நாளை) நடைபெறும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து ஹரியானா பி.கே.யூ செய்தித் தொடர்பாளர் ராகேஷ் பெய்ன்ஸ் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிடம் கூறுகையில், சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்து வருவதாகவும், அவர்களுக்கு போர்வைகளையும் விநியோகித்ததாகவும் கூறினார்.
ஒரு வீடியோ கிளிப்பில், அகாலி செய்தித் தொடர்பாளரும், டெல்லி சீக்கிய குருத்வாரா மேலாண்மைக் குழுவின் தலைவருமான மஞ்சிந்தர் சிங் சிர்சா, பாபா ராம் சிங், மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த ஒரு சிறந்த மனிதர் என்று கூறியுள்ளார்.
பி.கே.யுவைச் சேர்ந்த பால் கூறுகையில்,
அவருடைய மரணம் குறித்து நாங்கள் அறிந்தோம். விவசாயிகளின் வலியை அவரால் தாங்க முடியாது என்று அவர் கூறிய ஒரு கடிதத்தையும் நாங்கள் கண்டோம். இந்த மரணத்தால் நாங்கள் வருத்தப்படுகிறோம், குடும்பத்திற்கு எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். ”
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில்,
இந்த துக்கமான நேரத்தில், எனது இரங்கலும் அஞ்சலியும். பல விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். மோடி அரசாங்கத்தின் மிருகத்தனம் எல்லாம் எல்லைகளையும் தாண்டிவிட்டது. பிடிவாதத்தை விட்டுவிட்டு உடனடியாக விவசாய எதிர்ப்பு சட்டத்தை வாபஸ் பெறுங்கள் ”என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.
எஸ்ஏடி தலைவர் சுக்பீர் சிங் பாடல், தற்கொலை பற்றி கேள்விப்பட்டது பெரும் வேதனையளித்தார். அவரின் தியாகம் வீணாக செல்ல அனுமதிக்கப்படாது. நிலைமை மேலும் மோசமடைய வேண்டாம். 3 வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.