Advertisment

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் ஊடக ஜாம்பவான்கள் பட்டியலில் கலாநிதி மாறன், மனைவி முதலிடம்

இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் ஊடக பெரு முதலாளிகள் பட்டியலில் சன் டிவி குழுமத்தின் கலாநிதி மாறன் மற்றும் காவேரி கலாநிதி ஆகியோர் முதலிடம் வகிக்கின்றனர்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் ஊடக ஜாம்பவான்கள் பட்டியலில் கலாநிதி மாறன், மனைவி முதலிடம்

இந்தியாவிலேயே அதிக ஊதியம் பெறும் ஊடக பெரு முதலாளிகள் பட்டியலில் சன் தொலைக்காட்சி குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதி ஆகியோர் முதலிடம் வகிக்கின்றனர். 2016-2017-ஆம் ஆண்டில் இருவரது ஊதியமும் 78 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த தொகை கடந்த 2015-2016-ஆம் ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். அவர்களது ஊதியம் ஒரே மாதிரியாக இருந்தாலும், ஊக்கத்தொகை அதிகமாக வழங்கப்பட்டதால், இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் ஊடக முதலாளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்க வைத்துள்ளது.

Advertisment

அந்நிறுவனத்தின் 2016-2017-ஆம் ஆண்டறிக்கையின் படி, 2015-2016-ஆம் ஆண்டு பெற்ற ஊதியத்தொகையான 13.14 கோடி ரூபாயையே இந்தாண்டும் பெற்றுள்ளனர். அதேசமயம், சன் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் கே.விஜயகுமார் 2016-2017-ஆம் ஆண்டில் 0.97 கோடி ரூபாயை ஊதியமாக பெற்றார். இவர் கடந்தாண்டு 0.82 கோடி ரூபாய் சம்பளம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவி காவேரி கலாநிதியின் ஊக்கத்தொகையானது கடந்தாண்டு இருந்த 58.33 கோடியை விட, இந்தாண்டு 64.79 கோடி ரூபாயை பெற்றனர்.

கலாநிதி மாறன் 1993-ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சி குழுமத்தை ஆரம்பித்தார். இந்நிறுவனத்தில் 75 சதவீத பங்கு இவருக்குரியதாகும். கலாநிதிமாறன் இந்தாண்டு 295.56 கோடி ரூபாய் ஈவுத்தொகை பெற்றார். 2015-2016 ஆம் ஆண்டில் 458.12 கோடி ரூபாயும், 2014-2015-ஆம் ஆண்டில் 399.02 கோடி ரூபாயும் இவர் ஈவுத்தொகையாக பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

2017 நிதியாண்டில் சன் தொலைக்காட்சி குழுமத்தின் மொத்த வருமானம் 2,703.80 கோடி ரூபாய். இது கடந்த நிதியாண்டில் இருந்த 2,502.75 கோடி ரூபாயைவிட 8.03 சதவீதம் அதிகம். நிலையான வளர்ச்சியை நோக்கி இந்நிறுவனம் பயணிப்பதே தென் மாநிலங்களில் ஊடக தொழிலில் தொடர்ந்து இந்நிறுவனம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இந்தியாவின் பெரும் பணக்காரராக உள்ள முகேஷ் அம்பானி, கடந்த 9 ஆண்டுகளாக ரூ.15 கோடி ஆண்டு ஊதியத்துடனேயே இருக்கிறார். இதில், 4.16 கோடி ரூபாய் சம்பளம், மற்ற படிகள் 60 லட்ச ரூபாய், ஓய்வூதிய பலன்கள் 71 லட்ச ரூபாய், லாபத்திற்கான கமிஷன் 9.53 கோடி ரூபாய் ஆகியவை அடக்கம்.

Mukesh Ambani Kalanithi Maran
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment