கொல்கத்தா சிறையில் கர்ணன் அடைப்பு!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ் கர்ணனை விடுவிக்குமாறு உத்தரவிட முடியாது என உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சி.எஸ் கர்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றார். முன்னதாக அவர் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் செயல்பட்டதால், அவருக்கு 6 மாத கால சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஒரு மாதத்திற்கும் மேலாக நீதிபதி கர்ணன் தலைமறைவாக இருந்தார். இதனால், கொல்கத்தா போலீஸார் அவரை தீவிரமாக தேடிவந்த நிலையில், சி.எஸ் கர்ணன் நேற்று கோவையில் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், சி.எஸ் கர்ணனை விடுவிக்குமாறு அவரது வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை அமர்வு முன்பு கோரிக்கை விடுத்தார். ஆனால், கர்ணன் விவகாரத்தில் எதுவும் செய்ய முடியாது. மேலும், அவரை விடுவிக்குமாறு உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, அவர் கொல்கத்தா பிரசிடென்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

×Close
×Close