சென்னை வழக்குரைஞர் எல். விக்டோரியா கௌரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக உயர்த்த கொலீஜியம் பரிந்துரை அளித்தது.
இந்தப் பரிந்துரையை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (பிப்.7) தள்ளுபடி செய்தது.
அப்போது உச்ச நீதிமன்றம், “நாங்கள் ரிட் மனுவை ஏற்கவில்லை” என நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் பி ஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு கூறியது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக விக்டோரியா கௌரி செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் ஒரு பகுதியான வழக்கறிஞர்கள் அவரது நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
முன்னதாக, ஜனவரி 17 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் அவரை நீதிபதியாக நியமனம் செய்ய பரிந்துரைத்ததது.
இதற்கு, தமிழ்நாட்டில் உள்ள வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
அவர்கள் பாஜகவுடன் அவரது முந்தைய தொடர்பை சுட்டிக்காட்டினர் மற்றும் அவரது வெறுப்பு பேச்சு வழக்குகளை சுட்டிக்காட்டினர்.
மேலும் நீதிபதி கவாய், “எனக்கும் அரசியல் பின்னணி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நான் நீதிபதியாக இருந்து வருகிறேன். எந்த நேரத்திலும் எனது அரசியல் கருத்துக்கள் எனது முடிவுகளுடன் எடைபோடுவதாக நான் நினைக்கவில்லை, ”என்று கூறினார்.
அவர் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த நீதிபதி வி ஆர் கிருஷ்ண ஐயரையும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து நீதிபதிகள் வழக்குரைஞர் விக்டோரியா கௌரிக்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/