Advertisment

கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது சுப்ரீம் கோர்ட்; சி.பி.ஐ வழக்கில் தொடர்ந்து சிறை

முதல்வராக நீடிக்க வேண்டுமா என்பது கெஜ்ரிவாலின் விருப்பம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ஜூன் 26ம் தேதி சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருப்பார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
Arvind Kejriwal

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. (FB)

மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. முதல்வராக நீடிக்க வேண்டுமா என்பது கெஜ்ரிவாலின் விருப்பம் என்று நீதிமன்றம் கூறியது. அமலாக்க இயக்குனரகத்தால் (இ.டி) கைது செய்யப்பட்டதை எதிர்த்து கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்க: Supreme Court grants Arvind Kejriwal interim bail but he doesn’t walk out of jail yet

முதலமைச்சருக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, கைது செய்யப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் பெரிய அமர்வுக்கு சில கேள்விகளை பரிந்துரைத்தது. மதுபானக் கொள்கை வழக்கில் தொடர்புடைய ஊழல் வழக்கில் ஜூன் 26-ம் தேதி சி.பி.ஐ-யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் தொடர்ந்து சிறையில் இருப்பார். கடந்த மார்ச் 21-ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது.

அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சந்தீப் பதக்,  கூறுகையில் “இந்த வழக்கு உங்களால் உருவாக்கப்பட்ட சர்க்கஸ் அல்ல என்பதை பா.ஜ.க-விடம் கூற விரும்புகிறேன்” என்று கூறினார். மேலும், “நரேந்திர மோடி, அமித்ஷா மற்றும் பி.ஹெச்.பி ஆகியவை தேசத்திற்கு ஒரு விஷயத்தை மட்டுமே பங்களித்துள்ளன… அரசியல் ரீதியாக எதிர்கொண்டு தோற்கடிக்க முடியாத எந்தத் தலைவரையும் மோசடியாகவும் தவறாகவும் கைது செய்யும் சர்வாதிகார அமைப்பு” இந்த வகையிலிருந்து நாம் முன்னேற வேண்டும். அரசியல்... நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்... இந்த கேடுகெட்ட அரசியலில் இருந்து விலகி நேர்மறையான அரசியலை செய்ய பிரதமரையும், அமித்ஷாவையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று சந்தீப் பதக் கூறினார்.

கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி தலைவர் அதிஷி கூறுகையில்,  “உண்மையைக் குழப்பலாம், ஆனால், தோற்கடிக்க முடியாது. இன்று, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இந்த ஜாமீன், அரவிந்த் கெஜ்ரிவால் உண்மையுடன் இருந்தவர், உண்மையுடன் இருக்கிறார், உண்மையுடன் தொடருவார் என்பதை ஒட்டுமொத்த தேசத்தின் முன் நிரூபித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Arvind Kejriwal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment