Advertisment

தப்லிக் மர்காஸில் தங்கியிருந்த 2361 பேர் அகற்றம்: டெல்லி அரசு நடவடிக்கை

வைரஸ் பரவல் இடமாக உருவெடுத்துள்ள டெல்லி நிஜாமுதீன் மர்காஸை அகற்றி 2,361 வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார். மேலும், 617 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

author-image
Balaji E
புதுப்பிக்கப்பட்டது
New Update
nizamuddin markaz, nizamuddin markaz coronavirus, தப்லிக் நிஜமுதீன், டெல்லி, கொரோனா வைரஸ், tabligh nizamuddin, nizamuddin coronavirus, delhi nizamuddin coronavirus, delhi conference, coronavirus, covid19, latest corona virus news

வைரஸ் பரவல் இடமாக உருவெடுத்துள்ள டெல்லி நிஜாமுதீன் மர்காஸை அகற்றி 2,361 வெளியேற்றப்பட்டுள்ளார்கள் என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

Advertisment

வைரஸ் பரவல் இடமாக உருவெடுத்துள்ள நிஜாமுதீன் மர்காஸ் இன்று காலை அகற்றப்பட்டுள்ளது. அதிலிருந்து 2,361 பேர் வெளியேற்றப்பட்டு 617 பேர் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா டெல்லியில் புதன்கிழமை தெரிவித்தார்.

நிஜாமுதீன் கட்டிடத்தில் ஒரு பெரிய கூட்டத்தில் கலந்து கொண்ட 200 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பாஸிட்டிவ் சோதனை முடிவுகள் வந்ததைத்தொடர்ந்து, தேசிய அளவில் கொரோனா வைரஸ் பரவல் இருப்பதாக சந்தேகித்த நிலையில் திங்கள் கிழமை இந்த வெளியேற்றம் தொடங்கியது.

டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மனிஷ் சிசோடியா டுவிட்டரில், “இந்த 36 மணி நேர நடவடிக்கையில் மருத்துவ ஊழியர்கள், நிர்வாகம், காவல்துறை மற்றும் டிடிசி ஊழியர்கள் இணைந்து தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றியுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் தலைவணங்குகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் 24 பேர் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 50 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 5 பேர் பேர் உயிரிழந்தனர். அதனால், இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் அடையாளம் காணவும், தனிமைப்படுத்தி பரிசோதனை செய்ய 20 மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் தீவிரமாக உள்ளன.

இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பிற நாடுகளில் இருந்து வந்த வெளிநாட்டினர், மற்றும் டெல்லியில் இருந்து பிற மாநிலங்களுக்கு சென்றவர்கள் என அனைவரையும் கண்டுபிடிக்கும் சிக்கலான பணியை சுகாதார மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தப்லிக் இ ஜமாஅத்தின் உறுப்பினர்கள் கொரோனா வைரஸ்களைக் கொண்டுசென்று நாடு முழுவதும் பரப்பும் திறன் பெற்றிருக்கிறார்கள் என்று உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உள்துறை அமைச்சகம் மார்ச் 28-ம் தேதி அனுப்பிய கடிதத்தில், சுற்றுலா விசாவில் வந்த அனைத்து வெளிநாட்டு பிரதிநிதிகளையும் திரையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. கொரோனா வைரஸ் சூழலில் தப்லிக் இ குழுவில் இருந்த வெளிநாட்டவர் எவரும் முழுமையாகத் திரையிடப்பட வேண்டும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்படலாம் அல்லது மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அப்படி யாரேனும் வெளிநாட்டவர் கோவிட்19 பரிசோதனையில் இருந்து விடுபட்டவர் எனக் கண்டறியப்பட்டால், உடனடியாக அவரை கிடைக்கக்கூடிய முதல் விமானத்தில் அனுப்பிவிட வேண்டும்” என்று உள்துறை அமைச்சக கடிதம் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் காவல்துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி, தப்லிக் இ ஜமாஅத்தின் நடவடிக்கை ஒரு தாலிபானிக் குற்றம் என்று கூறினார். “இத்தகைய குற்றச் செயலை மன்னிக்க முடியாது. அவர்கள் பலரின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளனர். அரசாங்க உத்தரவுகளை மீறும் அத்தகைய நபர்கள், அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்று ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விஅவர் கூறினார். மர்காஸின் நிர்வாகத்திற்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Coronavirus Corona Delhi
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment