பஞ்சாபில் உள்ள பதிண்டா பகுதியில் ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்திய எல்லைப்பகுதியில் அவ்வப்போது தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதனை தடுக்க இந்திய ராணுவம் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வரும் நிலையில், அவ்வப்போது நடைபெறும் துப்பாக்கிச்சூடு தாக்குதலில் தீவிரவாதிகள் கொல்லப்பட்டு வருகின்றனர். அதேசமயம் இந்திய ராணுவமும் உயிரிழப்பை சந்தித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் செயல்பட்டு வரும் ராணுவ முகாமில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 4 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ராணுவத்தின் தலைமையக தென்மேற்கு கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், அப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ முகாம்க்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய பதிண்டா மூத்த காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) குல்னீத் சிங் குரானா “ஏதோ” நடந்துள்ளது என்பதை உறுதிப்படுத்தினார், ஆனால் ராணுவம் விவரங்கள் பற்றி எதுவும் தகவல் இல்லை என்று கூறினார். ராணுவத்தினரின் உள் தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன என்று கூறிய எஸ்எஸ்பி குரானா, இது தீவிரவாத தாக்குதல் அல்ல என்றும், ராணுவ முகாமில் ஏற்பட்ட உள்விவகாரம் போல் தெரிகிறது என்றும் கூறினார்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் முகாமில் உள்ள பீரங்கி பிரிவில் இருந்து சில ஆயுதங்கள் காணாமல் போயுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன. காணாமல் போன இந்த ஆயுதங்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பாக இன்று மாலை இராணுவம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு தேடுதல் குழு, துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ஐ.என்.எஸ்.ஏ.எஸ் (INSAS) துப்பாக்கியை பத்திரிகையுடன் கண்டுபிடித்ததாகக் கூறியுள்ளது.. மேலும் விவரங்களைக் கண்டறிய “இராணுவம் மற்றும் காவல்துறை இணைந்து ஆயுதத்தின் தடயவியல் ஆய்வை மேற்கொள்கின்றன. தடயவியல் ஆய்வுக்குப் பின்னரே ஆயுதத்தில் உள்ள சுற்றுகளின் இருப்பு எண் கிடைக்கும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தக் குற்றத்திற்காக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. அந்த பகுதி சீல் வைக்கப்பட்டு, “வழக்கின் உண்மைகளை கண்டறிய பஞ்சாப் காவல்துறையுடன் கூட்டு விசாரணைகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன” என்று இராணுவம் தெரிவித்துள்ளது.
“துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில், பீரங்கிப் பிரிவின் நான்கு இராணுவ வீரர்கள் சம்பவத்தின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு ஆளானார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியாளர்களுக்கு வேறு காயங்கள் எதுவும் பதிவாகவில்லை, ”என்று இராணுவத்தின் தலைமையக தென்மேற்கு கட்டளை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பீரங்கி படைப்பிரிவு அதிகாரிகளின் மெஸ் அருகே துப்பாக்கிச்சூடு நடந்ததாக ஏடிஜிபி பர்மர் தெரிவித்தார். “நாங்கள் இராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், அவர்களுக்குத் தேவையான எந்த வகையிலும் நாங்கள் உதவுவோம்,” என்று அவர் கூறினார். இது குறித்து துப்பறியும் அதிகாரி, அஜய் காந்தி, பதிண்டாவில் செய்தியாளர்களிடம் கூறுகையில், நான்கு ஜவான்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது கொல்லப்பட்டனர். இன்சாஸ் துப்பாக்கியின் 19 வெற்று குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன” என்றுகூறினார்.
சிவில் உடையில் இருந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறியதாகவும், அவர்களைப் பற்றி வேறு எதுவும் தெரியவில்லை என்றும் கூறிய அவர் நாங்கள் இராணுவ போலீசாருடன் இணைந்து விசாரணையை முன்னெடுத்து வருகின்றோம். ராணுவத்துடன் இணைந்து விசாரணை நடத்தப்படுவதால் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்ற விவரத்தை வெளியிட முடியாது என்று காந்தி கூறினார்.
எஸ்பி காந்தி இறந்த ராணுவ வீரர்களை கன்னர் சாகர் பன்னே, கன்னர் கமலேஷ் ஆர், கன்னர் யோகேஷ் குமார் ஜே மற்றும் கன்னர் சந்தோஷ் எம் நாக்ரால் என்றும் அடையாளம் காட்டினார். ராணுவம் ஹெக்ஸாகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள் மூலம் ஜவான்களைக் கொன்ற தாக்குதல்காரர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் குடியிருப்பாளர்களின் தேவையற்ற நடமாட்டத்திற்கு மொத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. பதிண்டா இராணுவ முகம் பரந்த திறந்தவெளிகளைக் கொண்ட நாட்டிலேயே மிகப்பெரியது என்பது குறிப்பிடத்தக்கது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“