அகமதாபாத் - மும்பை இடையேயான புல்லட் ரயில் திட்டப்பணிக்கு, ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே முன்னிலையில் பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். இது, நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டமாகும். இந்த அதிவேக புல்லட் ரயில், மணிக்கு 320 கி.மீ வேகத்தில் இயங்கும். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை (508 கி.மீ) சுமார் 2 மணி, 7 நிமிட நேரத்தில் கடக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தத் திட்டத்தால் நாட்டிற்கு எவ்வளவு ஆதாயம் கிடைக்கும் என்பதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் பட்டியலிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "Bullet Train மொத்த மதிப்பீடு 1 லட்சத்தி 8 ஆயிரம் கோடி (1,08,000 கோடி) இதில் 88,000 கோடி முதல் இதற்கு வட்டி (0.1%) மிகமிகக் குறைந்த வட்டி (இதே உலக வங்கியில் வாங்கியிருந்தா 5-7 % வட்டி)
கடனை திருப்பி கொடுக்க வேண்டிய காலம் - 50 ஆண்டுகள் (உலக வாங்கி - 25 ஆண்டுகள்)
கடனை திருப்பி அளிக்க 15 ஆண்டுகள் கழித்து ஆரம்பித்தால் போதும்.
இதில் ஈடுபட்டிருக்கும் தொழில் வல்லுநர்கள் 300 இந்திய பொறியாளர்கள் ஜப்பானில் சென்று பயிற்சி முடித்து இங்கு செயலாற்ற தயாராக இருக்கிறார்கள்.
ஜப்பானில் அடுத்த 3 ஆண்டுகளுக்கு 4000 பொறியாளர்களை புல்லட் ரயில் தொழில்நுட்பத்திற்காக பயிற்சி எடுக்கப் போகிறார்கள்.
ஆக எந்த விதத்திலும் தொழில் நுட்பத்திற்கு வெளிநாட்டுக்காரர்களை நம்ப தேவையில்லை.
ஜப்பான் பல்கலைக்கழகத்தில் முழு நிதி உதவியோடு இந்த தொழில் நுட்பத்தில் 30 இந்தியர்களுக்கு உயர் தொழில்நுட்ப படிப்புக்கு ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
உடனடியாக 20,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
வருங்காலத்தில் இத்தகைய ரயில் எல்லா மாநிலங்களுக்கும் வர வேண்டும் ஜப்பானைப் போன்ற " High Speed Train Training Institute". 2020 ல் அமைக்கப்பட்டு அதில் 4000 மேற்பட்டவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதன்முலம் நம் நாட்டிற்கான புல்லட் ரயில்கள் மட்டுமல்ல நம் நாட்டில் இருந்து தயாரித்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.
இந்த புல்லட் ரயில் அகமதாபாத்திலிருந்து மும்பை செல்வதற்கு 2 மணி நேரம் மட்டுமே ஆகும். இப்போது 8 மணி நேரம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி விரைவாக வரும்போது பிற மாநிலங்களுக்கு இடையான சுற்றுலாவும் மேம்படும்" என்றார்.