Advertisment

'ஜெய் ஸ்ரீராம்' எழுதிய மாணவனுக்கு அடி, உதை: பள்ளி முதல்வர், ஆசிரியர் மீது வழக்குப் பதிவு

ஜம்மு காஷ்மீர் பள்ளி ஒன்றில் கரும்பலகையில் ஜெய் ஸ்ரீராம் என எழுதியதற்காக 10-ம் வகுப்பு மாணவனை முதல்வர், ஆசிரியர் தாக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
People protest in Kathua’s Bani area on Saturday. (Express photo)

People protest in Kathua’s Bani area on Saturday. (Express photo)

ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டம் பானி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் கரும்பலகையில் ஜெய் ஸ்ரீராம் என்று எழுதியதற்காக 10-ம் வகுப்பு மாணவனை அந்த பள்ளியின் முதல்வர், ஆசிரியர் தாக்கியதாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisment

போலீசாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் வெள்ளிக்கிழமை நடந்தது மற்றும் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. காயங்கள் மற்றும் உள் காயங்களுடன் மாணவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றிய தகவல் பரவியதும் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பானி நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பள்ளி முதல்வர் முகமது ஹபீஸ் மற்றும் ஆசிரியர் ஃபரூக் அகமது மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'கொன்று விடுவோம்' என மிரட்டல்

இருவர் மீதும் ஐ.பி.சி பிரிவுகள் 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), 342, 504 (வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்), மற்றும் சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) பிரிவு 75 (குழந்தைக்கு கொடுமை செய்தல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஆகஸ்ட் 25-ம் தேதி மதியம் நடந்துள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது இந்த சம்பவம் நடந்ததாக எஃப்ஐஆர் கூறுகிறது. அதில், "இந்த மாணவன் ஜெய் ஸ்ரீராம் என்று கரும்பலகையில் எழுதியுள்ளார். பரூக் வகுப்பிற்கு வந்த போது இதைப் பார்த்து மற்ற மாணவர்கள் முன்னிலையில் அந்த மாணவனை மைதானத்திற்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளார்.

பின்னர் அந்த மாணவனை முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்ற அவர், இருவரும் அறையை பூட்டி மாணவனை அடித்துள்ளனர். இனிமேல் இப்படிச் செய்தால் கொன்று விடுவோம்" என்றும் மிரட்டியுள்ளனர்.

3 பேர் கொண்ட குழு

சனிக்கிழமையன்று அந்த பகுதியில் பந்த் நடந்தது மற்றும் கதுவாவின் பசோலி நகரத்திலும் போராட்டங்கள் நடைபெற்றது.

கதுவா துணை கமிஷனர் ராகேஷ் மின்ஹாஸ், பானி துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவை நியமித்து, இந்த விவகாரம் குறித்து விசாரித்து இரண்டு நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்டார். கதுவாவின் துணை முதன்மைக் கல்வி அதிகாரியான பானி எஸ்.டி.எம் மற்றும் கரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் ஆகியோர் குழுவின் உறுப்பினர்களாக உள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Jammu And Kashmir
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment