மாசடைந்த ஏரியை மீட்டு நாயகனான 15 வயது சிறுவன்

ஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக எலி பிடிக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீநகரில் தன் வாழ்வாதாரத்திற்காக குப்பைகளை பொறுக்கும் தொழிலை செய்துவந்த 15 சிறுவன் ஸ்ரீநகர் நகராட்சியின் நட்சத்திர தூதுவராக நியமிக்கப்பட்டார்.

ஸ்ரீநகரை சேர்ந்த 15 வயது சிறுவன் பிலால் அகமது தர், ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவருடைய தந்தை இறந்துவிட்டார். அதனால், குடும்ப பொறுப்புகளை சுமக்கும் நிலைக்கு சிறுவன் பிலால் அகமது தர் ஆளானான். பள்ளிப்படிப்பையும் பாதியில் நிறுத்த வேண்டியிருந்தது. வாழ்வாதாரத்திற்காக, ஆட்டோமொபைல் வேலைகள், உணவகங்களில் உதவியாளர் வேலை என பல்வேறு தொழில்களில் சிறுவன் பிலால் ஈடுபட்டான்.

ஒருமுறை தன் கிராமத்தின் அருகிலேயே அமைந்திருந்த ஆசியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உலார் ஏரிக்கு தன் நண்பர்களுடன் பிலால் சென்றிருந்தான். அங்கு ஏரியில் பாலித்தீன் குப்பைகள் உட்பட ஏரியை பாழ்படுத்தும் பல பொருட்களைக் கண்டான். பலருடைய வாழ்வாதாரமாக உள்ள இந்த ஏரி மெல்ல மெல்ல அழிந்து வருவதைக் கண்டான். அவர்களுடைய குடிநீர் ஆதாரமும் அந்த ஏரிதான். ”இதைக் காப்பாற்றாமல் போனால் வருங்கால தலைமுறையினருக்கு நாம் எதை பரிசளிப்போம்? அவர்கள் நமக்கு சாபமிடுவார்கள்.” என சிறுவன் ஏங்கினான்.

ஏரியை சுத்தம் செய்ய நினைத்தான். அன்றிலிருந்து ஏரியில் உள்ள பாலித்தீன் பைகளை எடுத்து விற்றுவந்தான். அதன் மூலம் நாளொன்றுக்கு 200 முதல் 250 ரூபாய் வருமானம் கிடைத்தது. அதன்மூலம் சேமித்த தொகையில் தனது சகோதரிக்கு திருமணமும் செய்திருக்கிறான் சிறுவன் பிலால். மேலும், ஏரியையும் மெல்ல மெல்ல சுத்தம் செய்தான்.

சிறுவனைப் பற்றி அறிந்த உள்ளூர் இயக்குநர் ஜலால் பாபா என்பவர் அவனைப்பற்றிய குறும்படத்தை எடுத்தார். இதைக்கண்ட ஸ்ரீநகர் நகராட்சி ஆணையர் சிறுவனை நட்சத்திர தூதுவராக நியமித்தார். இனி அதிகாரிகளுக்கே, மாசுபடுதலையும், அதனை தவிர்ப்பது எப்படி என்ற அறிவுரைகளையும், வழிகளையும் சிறுவன் பிலால் எடுத்துரைப்பான் என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close